பிரேசிலில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் செயல்திறன் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேசிலில் தற்போது அமெரிக்காவை விடவும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2286 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது வரை சுமார் 11.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ,70,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். […]
