கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே […]
