தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது என முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் இயக்குனர், துணை இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உடன் மருத்துவர்கள் மனோஜ் முரேக்கர், பிரதீப் கவுர் ஆகியோரும் நேரில் சந்தித்து பாராட்டு கூறியுள்ளனர். அமைச்சர் […]
