சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
