தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு வாடகை படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கி வருகிறது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். […]
