கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடிகளிலும், பிற மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கறி […]
