கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் சமீப காலமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவானது சுகாதாரம், […]
