கொரோனா குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை செய்தது தொடர்பாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாராட்டியதில் கொரோனா தொற்று பாதிப்பு சம்பந்தமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பை சிவசேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, “போர் காலம் போன்ற நிலையில் அரசு நிர்வாகத்தில் வழிமுறைகளை வழங்க ஒரு அதிகார மையம் தான் […]
