Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

16 நாட்களுக்கு பின் தூத்துக்குடி இளம்பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா பாதிப்பின் காரணமாக  ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில்  அவர் கடந்த மாதம் 29ம் தேதி தாம்பரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் எட்டயாபுரத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இயற்கையான மருந்தே எங்க மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றும் – மடகாஸ்கர் அதிபர்

கொரோனா தொற்றை மூலிகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் தெரிவித்துள்ளார் மடகாஸ்கர் தீவில் கொரோனா தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அந்த தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்னும் தாவரத்திலிருந்து மலேரியா நோய்க்கு மருந்து தயார் செய்யப்படுகின்றது. அதே மருந்து கொரோனா தொற்றையும் அளிக்க வல்லது என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார். இயற்கையாக தயாரிக்கப்படும் அந்த மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டு இருப்பதாக கூறிய […]

Categories
உலக செய்திகள்

ஆய்வகத்துல கொரோனா…? அமெரிக்கா யூகத்துல பேசுறாங்க – உலக சுகாதார நிறுவனம்

வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவானது என்பது அமெரிக்காவின் யூகமே என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு முன்னரே பிரான்சில் கொரோனா…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

சீனாவிற்கு முன்னதாகவே பிரான்சில் தோற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான்  சென்ற வருடம் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தோற்று தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இதுவரை கொரோனாவால்  36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரவியதாக கூறப்பட்டது ஆனால் சீன அரசு உலக சுகாதார அமைப்பிடம் டிசம்பர் 31-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தான் என்னை காப்பாத்துச்சு….. காரணம் என்ன…? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பெண்….!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா  வைரஸ் தான் தனது உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு 11 நாட்கள் கழித்து ஏஞ்சலா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர். மார்ச் 22 அன்று செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுற்றி திரவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்களுக்கும் கொரோனா…. பாசத்தால் துடித்த தந்தை… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

தனது மகன்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர். இவரது இரண்டு மகன்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா  தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிருந்தாவனம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தான் இருக்கும்  பகுதி தடை செய்யப்பட்டதாலும் தனது இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் தவறான விவாதம்… இப்படி தான் கொரோனா உருவானது… அமெரிக்கா தொற்று நோய் இயக்குனர் விளக்கம்…!!

கொரோனா  தொற்று உருவானது எப்படி என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவாக்கப்பட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ குற்றம் சாட்டி வந்தனர். இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா தொற்று உருவாக்கப்படவில்லை என அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று […]

Categories
உலக செய்திகள்

ஆய்வகத்தில் கொரோனா உருவாகவில்லை அந்த இடத்தில தான் தோன்றிருக்கு – அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“NHS மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதியில்லை”… காரணம் இதுதான்!

லண்டனில் இருக்கும் NHS நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக கிழக்கு லண்டனில் இருக்கும் ExCel சென்டரில் NHS நைட்டிங்கேல் மருத்துவமனை ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து இயங்கி வந்தது. நாலாயிரம் படுக்கைகள் அமைந்த மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே காணப்பட்டது. முதல் மூன்று வாரத்தில் 51 நோயாளிகளுக்கு மட்டுமே மொத்தமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு NHS பிரிட்டன் எவ்வளவு செலவு […]

Categories
உலக செய்திகள்

உஷாரா இருங்க… ஸ்மார்ட்போன் கொரோனாவை பரப்பலாம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்!

ஸ்மார்ட் போன்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். Bond பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட Dr. Tajouri  இதுகுறித்து கூறுகையில் “80% நோய்க்கிருமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று ஒரு நோயில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கை கழுவும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் முறையாக தூய்மைப்படுத்துவது அவசியம். சமூகத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

காப்பாற்ற முடியவில்லை.. உயிர் பிரிந்து விட்டது… பெண் மருத்துவ ஊழியரின் மகள் உருக்கம்!

கனடாவின் ஜமேக்காவை சேர்ந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். Arlene Reid என்பவர் கனடாவின் ஓன்றாறியோவில் இருக்கும் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் Arlene கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து Arlene மகள்  கூறுகையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுவிடுவதில் […]

Categories
உலக செய்திகள்

செல்ல பிராணியை கொல்ல நினைக்கும் கொரோனா…!!

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

இந்த 2 நோயைப்போலவே.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க… கஷ்டம் தான்… நிபுணரின் கருத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!!

டெங்கு, எச்.ஐ.வி போன்று கொரோனா தொற்றிற்கு மருந்து இருக்காது என உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வில் இருக்கின்றது. அதில் இரண்டு மனித சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சுகாதாரத் துறை நிபுணர் டெங்கு, ஹெச்ஐவி நோய்களைப் போன்று கொரோனாவிற்கும் மருந்துகள் இருக்காது என தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“ஜி ஜின்பிங் வலுவான தலைவர்”… ஆனால் அறிக்கை வெளியிடுவோம்… விமர்சிக்க மறுத்த டிரம்ப்!

சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் […]

Categories
உலக செய்திகள்

மரண விளிம்புக்கு சென்று… கொரோனாவை வென்று காட்டிய 12 வயது சிறுமி… உருகிய தாயார்!

12 வயதான ஜூலியட் என்ற சிறுமி மரணத்தின் விளிம்புவரை சென்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வந்துள்ளார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெனிபர் டேலி தம்பதி மகன் மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பத்தின் மீது கொரோனாவின் பார்வை விழுந்துள்ளது. இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில் “எனது மகள் ஜூலியட்க்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதால்  நியூ ஆர்லியன்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதாக கூறினர். ஆனால் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரா செமயா பண்ணுறீங்க… “இப்போ உயர்ந்துட்டிங்க”… இந்தியாவை தாறுமாறாக புகழ்ந்த அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தலைமை பொறுப்பிற்கு உயர்ந்துள்ளது என அமெரிக்கா பாராட்டியுள்ளது இந்தியா-அமெரிக்கா விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் இணை தலைவரான ஜார்ஜ் ஹோல்டிங் எம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொடிய வைரசுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பு வாய்ந்தது. தற்போதைய சூழலில் இது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியா கொரோனா  தொற்றை தடுக்க மிகவும் கடுமையாக போராடி வரும் சூழலில் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 10 மாதம் ஆகும்… அடுத்த அலைக்கு தயாரா இருங்க… எச்சரிக்கும் WHO!

இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலை சமாளிக்க அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இப்போதைக்கு கொரோனா போகப் போவதில்லை என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் டாக்டர் க்ளுஜ் கூறியுள்ளார். தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் முழுவதிலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவால் அதிக ஆண்கள் மரணம்…! உயிரிழக்க இது தான் காரணம் …!!

கொரோனா தொற்று பெண்களை விட அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் உலகம் முழுவதிலும் பல நாடுகளை தாக்கிய கொரோனா தொற்றிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களை தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது. உலக நாடுகளில் அதிகமாக தொற்று பரவி வரும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ரெமடிசிவர்- அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் காலத்தை குறைக்க ரெமடிசிவர் மருந்து உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோன தொற்றுக்கு அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை மருந்து ஒன்று செயல்படுகிறது எனவும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டினர் யாருக்கும் கொரோனா இல்லை – தென்கொரியா

தென்கொரியாவில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அதிவேகமாகப் பரவிய கொரோனா தென்கொரியாவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் போன்றவற்றினால் கொரோனா தொற்றை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது அந்நாடு. தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தடம் பதித்த கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 761 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து….! விரைவில் அறிவிக்கின்றது அமெரிக்கா …!!

கொரோனா தொற்று பாதிப்புக்கான மருந்தாக ரெமெடிசிவருக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. பலநாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நல்ல […]

Categories
உலக செய்திகள்

நாங்க அதிகமா தாறோம்….. ”நீங்க அவுங்களுக்கு ஊதுறீங்க” டிரம்ப் ஆவேசம் ….!!

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறியுள்ளது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி லட்சக்கணக்கான உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கொரோனா விவகாரத்தில் தங்களை தவறாக வழிநடத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் அதிபர் டிரம்ப். கொரோனா தொற்று குறித்த தகவல்கள் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தெரிந்த பின்னர்தான் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் செல்ல… 200 கிமீ நடந்து வந்த நபர்…. வழியில் கண்டு போலீசார் செய்த பெரும் உதவி!

கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல்லில் இருந்து நடந்தே பெரம்பலூர் வந்த ஒரு நபருக்கு காவல் துறையினர் சாப்பாடு கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.  இதனிடையே வாகனம் ஏதும் ஓடாததால் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா யுத்தம்…. மளிகைக் கடைக்காரரின் வியக்கத்தக்க செயல்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனவை தடுக்க வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கும் ரூபாய் நோட்டுகளை வியாபாரி கிருமிநாசினியில் சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் உலக நாடுகளில் பரவத்  தொடங்கிய கொரோனா  தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தியாவசிய  பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா போரில் உதவி”… அமெரிக்காவுக்கு துணை நிற்கும் துருக்கி!

கொரோனாவை தடுக்கும் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு உதவ துருக்கி துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்கு பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்தது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் அமெரிக்காவிற்கு முகக் […]

Categories
உலக செய்திகள்

உலகை உலுக்கிய வூஹான் நகரில் என்ன நடக்கிறது?… இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்!

வூஹான் நகரில் தொற்று பரவியது முதல் கட்டுக்குள் கொண்டுவந்தது வரை வூஹான் வாழ் இந்தியர்கள் மனம் திறந்து பேசியுள்ளனர்  சீனாவில் சிறப்பு மிக்க நகரமாக இருந்து வந்தது வூஹான் நகரம். தலைசிறந்த கல்வி நிலையங்களும், தொழில் துறைகளும், ஆய்வுக் கூடங்களும் அந்நகரிலேயே இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வூஹான் நகருக்கு மேற்படிப்பிற்காக ஏராளமான மாணவர்கள் வருவதுண்டு. 2018 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசியதும் வூஹான் நகரில் தான். […]

Categories
உலக செய்திகள்

சுறுசுறுப்பாக பணியாற்றிய இளம் வயது நர்ஸ் கொரோனாவால் பலி!

இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் நர்ஸ் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயதான ஆண் நர்ஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். St.ஜார்ஜ்  மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் கென் லம்பட்டன். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்னும் ஒருவர் தான்… கொரோனாவை விரட்டியடிக்கும் தூத்துக்குடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.. முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 71 வயதான மூதாட்டி  உயிரிழந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மீதமுள்ள 26 பேரில் இதுவரை 25 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை பரப்பியது அமெரிக்க பெண் ? சீனா பதிலடி …!!

அமெரிக்க ரிசர்வ் படையை சேர்ந்த பெண் வீரர் ஒருவரால் தான் வூஹானில் கொரோனா பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான உயிர்களை எடுத்தது. வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என ஆய்வாளர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இதனை திட்டவட்டமாக சீனா மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அமெரிக்கா, […]

Categories
உலக செய்திகள்

பகீர் தகவல்…! ”கொரோனாவின் புது அறிகுறி” அமெரிக்காவில் ஷாக் …!!

கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டறிந்துள்ளது உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா  தொற்று பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகளில் வைரஸ் குறித்த ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆய்வின் முடிவிலும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்கு   இருக்கும் புதிய அறிகுறிகளைக் […]

Categories
உலக செய்திகள்

38,020 பேர்….! ”எல்லாரையும் அனுப்பிட்டோம்” கடைசி ஆள் இதான் – சீனா மகிழ்ச்சி ..!!

வூஹானிலிருந்து அனைத்து கொரோனா தொற்று நோயாளிகளும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் பிறப்பிடமாக அமைந்தது சீனாவின் மத்திய நகரமான வூஹான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் 200 க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் 82830 பேரை தாக்கி 4633 மரணமடைந்தனர்.  77,944  தீவிர சிகிச்சை கொடுத்ததை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து […]

Categories
உலக செய்திகள்

”கொரோனாவுக்கு பெண்கள் தான் காரணம்” மதகுரு பேச்சால் சர்ச்சை …!!

மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

போர் அடிக்குது…! ”வாங்க சீட்டு விளையாடலாம்” 24 பேருக்கு கொரோனா பரவல் ….!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 26 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 800க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். அதில் ஆந்திர மாநிலத்தில் 1061 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மே 3 வரை நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் சிக்கிய பிரதமர் ….. இன்று முதல் பணி செய்கிறார் ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணம் அடைந்ததை தொடர்ந்து இன்று பணிக்கு செல்ல உள்ளார் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் OK ஆகிட்டாங்க….! மகிழ்ச்சியில் இருக்கும் சீனா ….!!

வூஹான் நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது சீனாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா  தொற்று முதன்முதலில் பரவ தொடங்கியது சீனாவின் வூஹான்  நகரில் தான். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா  தொற்று அந்நகரில் மேற்கொண்ட கடினமான தடுப்பு நடவடிக்கைகளால்  கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் வூஹான்  நகரைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா  தொற்று தொடங்கிய வூஹான்  நகரம் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு ? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ….!!

இன்று மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது  இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது  ஊரடங்கு  மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற  சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் 11 ஆம் […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை….! ”குழந்தைகளுக்கு புதிய ஆபத்து” பெற்றோர்கள், உலகநாடுகள் உஷார் ….!

கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது   உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா  தொற்றை தடுப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதும். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதுமாக இருந்து வருகின்றனர். மக்களும் ஊரடங்கு காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் ஐநா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்று பரவி […]

Categories
உலக செய்திகள்

4-ல் ஒருவர் அமெரிக்கர் …! ”அல்லோலப்படுத்தும் கொரோனா” சிக்கி தவிக்கும் USA …!!

உலக அளவில் கொரோனாவில் மரணம் அடைவதில் நான்கில் ஒருவர் அமெரிக்கராக இருப்பதும் அமெரிக்காவின் பரிதாப நிலையை உணர்த்துகிறது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வல்லரசு நாடாக காட்சியளித்த அமெரிக்காவின் நிலை தற்போது பரிதாபம் ஆகிவிட்டது. இந்த அளவுக்கு கொரோனா அமெரிக்காவை கொண்டுவந்து விட்டிருப்பது மிகப்பெரிய துயரம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் இந்த தொற்றினால் 9 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து துருக்கி போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா குறைகிறது….! ”இதைப்பார்க்க அற்புதமா இருக்கு” டிரம்ப் மகிழ்ச்சி …!!

அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறைவதை தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்து விட்டது. அதிலும் உலகின் நிதி தலைநகரம் என்ற சிறப்பு மிக்க நியூயார்க் நகரம் தற்போது தொற்று மையமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொழுப்பெடுத்த பாகிஸ்தான்….! ”கொரோனா நேரத்தில் ஏவுகணை சோதனை” கடுப்பில் மக்கள் …!!

பாகிஸ்தான் கொரோனா தொற்று நெருக்கடியிலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது உலகமுழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கையும் 250-ஐ  கடந்துவிட்டது. இதனால் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட […]

Categories
உலக செய்திகள்

ஒன்றாக பிறந்து…. ”நர்சாக பணியாற்றிய இரட்டையர்கள்” பலி கொண்ட கொரோனா …!!

கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை செவிலியர்கள் கொரோனா  பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆக பணியாற்றி வந்தவர்கள் எம்மா டேவிஸ், கேட்டி டேவிஸ். இரட்டையர்களான இவ்விருவரும் அச்சு அசல் ஒரே முக ஜாடை கொண்டவர்கள். கல்லூரியில் படிக்கும் போதும் இருவரும் ஒன்று போல் நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படிப்பு முடிந்ததும் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் வேலையும் கிடைத்தது. இந்நிலையில் கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது தனது  சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட  40 வயது பெண் அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு  அந்த பெண்ணை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஊரடங்கால்  தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தற்காலிகமாக தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு  நிகழ்ந்த கொடுமை அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து  பாதிக்கபட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

கடைகளை திறக்கலாம்…! ”புது ஆயுதத்தை கையிலெடுத்த” அமெரிக்கா – கொரோனா காலி …!!

அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது   அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் […]

Categories
உலக செய்திகள்

மெர்சலான அமெரிக்கா….! ”மாஸ் காட்டிய இந்திய மருத்துவர்” குவியும் பாராட்டு ….!!

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் கர்நாடகாவை சேர்ந்த பெண் மருத்துவரை அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக நடந்துவரும் போரில் போர் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் களத்தில் நின்று போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தி சுப்பிரமணியை அமெரிக்க அரசு கௌரவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சவுத் வின்ட்சர்பகுதியிலிருக்கும் மருத்துவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு போலீசாருக்கு செய்த பெரிய உதவி என்ன தெரியுமா?

காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசங்களையும் ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களையும் நடிகர் யோகிபாபு வழங்கியுள்ளார்  தமிழ் திரையுலகில் யோகி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் யோகிபாபு. நகைச்சுவை மட்டுமல்லாது அதிகப்படியான மனிதாபிமானத்தையும் கொண்டவரே இவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சில தினங்களுக்கு 1250 கிலோ அரிசியும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.  […]

Categories
உலக செய்திகள்

“ஆதாரம் இல்ல”… குணமடைந்தாலும் மீண்டும் தாக்குமா கொரோனா?… எச்சரிக்கும் WHO..!!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா  பரவிவரும் நிலையில் சில நாடுகள் தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் அல்லது சான்றிதழ்களை கொடுத்து வருகின்றனர். அதாவது அவர்கள் பாதுகாப்பானவர்கள், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு செய்து வருகின்றனர்.  சிலி நாடு கடந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

இரக்கமற்ற கொரோனா… “கடைசி நிமிடம்”… கணவனை பார்க்க ஓடோடி வந்த மனைவி… செல்போனை பார்த்து அழுத சோகம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை மருத்துவமனைக்கு பார்க்க சென்ற மனைவி அவரது மொபைலை பார்த்து கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது  கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்க ஓடோடி   வந்த காதல் மனைவியால் இறுதியாக கணவரை பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனது  மொபைலில் சில  பிரியாவிடை செய்திகளை விட்டு சென்றிருந்தார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியை சேர்ந்த ஜான் சுமார் ஒரு மாத காலம் கொரோனாவுடன்  போராடி வந்த […]

Categories
உலக செய்திகள்

கண்களில் கொரோனா… ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோயாளிகளின் கண்களில் தொற்றின் தடயங்கள் இருக்கும் என அறிவியல் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர் கொரோனா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளின் மூக்கில் கண்டுபிடிக்கப்படாத சில தினங்களுக்கு பின்னர் கண்களில் இருக்கும் என அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து 65 வயதான பெண்மணி ஜனவரி 23 அன்று இத்தாலிக்கு பயணம் செய்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் தொண்டை புண், வரட்டு இருமல், வெண்படலம் […]

Categories
உலக செய்திகள்

3ஆம் உலகப்போர்…! ”கொரோனா மூலம் தொடங்கிய சீனா” அதிர்ச்சி தகவல் …!!

அணு ஆயுதங்கள் ஏதுமின்றி வைரசை பரப்பி சீனா மூன்றாம் உலகப்போரை தொடங்கியுள்ளது என அமெரிக்கா அரசியல் நிபுணர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர்களை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகளும் சீனா திட்டமிட்டு தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவின் திட்டம் குறித்து சர்ச்சை வலுப்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் உலகப்போரை சீனா அணு ஆயுதமும் இல்லை […]

Categories
உலக செய்திகள்

70 நாட்களுக்கு பின்… மீண்டும் மிரட்டும் கொரோனா… அதிர்ச்சியில் சீனா!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இன்றி மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாக கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற  பலரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தொற்றிலிருந்து விடுபட்டு சென்ற பலருக்கு 70 நாட்களுக்கு பின்னர் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சீன அதிகாரிகளை […]

Categories

Tech |