கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என […]
