Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. அடுத்த 3 நாளுக்கு முழு ஊரடங்கு…. வருவாய் ஆட்சியர் உத்தரவு….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விட கொடிய நோய்….? மீண்டும் சீனாவால் பதற்றம்…. பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி….!!

கொரோனா வைரஸ் பாதிப்புகளை மறைக்க வேறு ஒரு கொடிய நோய் பரவி வருகிறது என சீனா வதந்தி பரப்புவதாக கஜகஸ்தான் நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்து உள்ளனர். எனவே சீனாவின் மீது உலக நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதற்கான காரணம் இத்தனை இறப்பிற்கும் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா..!!

பொலிவியா நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொலிவியா அரசாங்கத்தின் சுகாதார மந்திரி உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சிகிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்  அமெரிக்காவின் இரண்டாவது தலைவரான அனேஸ் கூறுகையில், “தனது குழுவில் இருக்கும் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார். அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் “நான் வலுவாகவே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு கொரோனா” போன் மூலம் தகவல்…. வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை […]

Categories
அரசியல்

தொடர் நடவடிக்கை…. சென்னையில் மட்டும் 18% குறைந்த கொரோனா…. அமைச்சர் தகவல்….!!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]

Categories
அரசியல்

“கொரோனா பரவல்” சிக்னல்களில் கட்டுப்பாடு…. இனி 60 நொடி மட்டுமே….!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக சிக்னல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதனால் நகரங்களில் இருக்கக்கூடிய சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் சகஜமாக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

“காற்றில் பரவும் கொரோனா” அச்சம் வேண்டாம்…. இதை செய்தால் போதும்….!!

காற்றில் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்தும், அது பரவக்கூடிய தன்மை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் பல தகவல்கள் கொரோனா குறித்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மொத்த பாதிப்பில் 63%….. “கவனம் தேவை” 5 மாநில மக்களுக்கு எச்சரிக்கை….!!

கடந்த ஜூன் மாதத்தில் இறுதியில் மட்டும் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் பாதிப்பு இந்தியாவின் மொத்த பாதிப்பில் 63 சதவிகிதம் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாத இறுதிக்கு முன் வரையிலும், கொரோனா பாதிப்பு சீராக கட்டுக்குள் இருந்த நிலையில், மே மாத இறுதி வாரத்திலும், ஜூன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா என்பதால்… கை விரித்த தனியார் மருத்துவமனை…. காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்….!!

புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் விளம்பரம்” இதை சாப்பிட்டால்…. கொரோனா குணமடையுமா….? அதிகாரிகள் விசாரணை….!!

கோவையில் மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என விளம்பரம் செய்த கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மற்றொருபுறம் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்ததோடு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாமல்… சாதாரணமாக நினைத்த பிரதமரை தொற்றிக்கொண்ட கொரோனா..!!

தொற்றை பொருட்படுத்தாமல் சாதாரண காய்ச்சல் என்று முகக் கவசமின்றி சுற்றி வந்த பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகின்றது பிரேசில். நேற்று வரை 16 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அங்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு அதிபர் பொல்சனரோ கொரோனா தொற்று சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என கூறியதோடு, சமூக விலகல் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பிரேசிலில் புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கொள்ளை லாபம்…. நெகட்டிவ் ரிபோர்ட்டுக்கு ரூ2,500…. மருத்துவமனைக்கு சீல்….!!

உத்திரபிரதேசத்தில் கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த மருத்துவமனைக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது பணியை மக்களுக்காக சேவையாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்களால் தற்போது போற்றப்படுகின்றனர். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளும், சில அதிகாரிகளும் செய்யும் பெரிய தவறுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள் இந்த துறைகளை ஒரு நிமிடத்தில் கொச்சைப்படுத்திவிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரிபிள் லாக்டவுன்” அனுமதியின்றி வெளியே வந்தால்…. 14 நாள் தனிமை….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ட்ரிபிள் லாக்டவுன் திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. இருப்பினும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிகரித்துச் செல்லும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை ஆரம்ப […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” 2021 க்கு முன் சாத்தியமில்லை…. மத்திய அமைச்சகம் தகவல்….!!

2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி மருப்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகளை பரிசோதிக்கும் முயற்சிகள் […]

Categories
உலக செய்திகள்

உயிரே முக்கியம், பணி முக்கியமல்ல… 48 மருத்துவர்கள் ராஜினாமா… பாகிஸ்தானில் அவலம்….!!

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நேற்று வரை 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 700 பேர் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக மருத்துவர்களே அதிகம். இந்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் என்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்கள் தொற்று….. முடிவெடுத்த கேரளா….. ஒரு ஆண்டுக்கு அதிரடி …..!!

கேரளாவில் கொரோனா தொற்றின்  தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதல் முதலில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்ப கட்டத்தில் கேரளாவில் தொற்று அதிக அளவு இருந்தாலும் பின்னர் பல நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக அங்கு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 3 தினங்களில் மட்டும் 600க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இப்ப தேர்வு தேவையா…? 32 மாணவர்களுக்கு கொரோனா…. மாநில அரசுக்கு மக்கள் கண்டனம்….!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம் என கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கேரள அரசு வெற்றிகரமாக தனது தங்களது மாநில மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அரசோ மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேர்வை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 315….. 4000த்தை தாண்டிய கொரோனா…. அச்சத்தில் மதுரை மக்கள்….!!

மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 90 […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” சில வித்தியாசம் மட்டுமே…. 3 வது இடத்தை நோக்கி இந்தியா….!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மிக விரைவில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் ஒருபுறம் மும்முரம் காட்டி வருகின்றனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலும் நாள்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

3-வது இடத்தை நோக்கி இந்தியா!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315-ல்  இருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா தொட உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர். 14,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15ல் மருந்து…. சுதந்திரம் அடைவோமா..? எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருபுறம் ஊரடங்கை கையாண்டு வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மனிதர்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த மறுநாள்….. மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி….. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” சித்த மருத்துவம் சூப்பர்…. நல்ல பலன்….. மாநகராட்சி கமிஷனர் பேட்டி….!!

சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]

Categories
அரசியல்

சென்னையை தாண்டி…. பிற மாவட்டத்திலும் அதிகரிக்கும் பரவல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் மட்டும் தான் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பொதுநலம் தேவை….. இந்த தவறை செய்தால் கொரோனா பரவும்…. மக்களுக்கு எச்சரிக்கை….!!

புகைபிடிப்பவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பினும், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் எப்படி பரவுகிறது? எதன் மூலமாகப் பரவுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெரிவித்து, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் கூறி […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா… வளர்ப்பு பிரியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் மற்றொரு நாய்க்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆறு வயது செல்லப் பிராணியான நாயை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென நாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில் நாய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ஏற்கனவே நரம்பு மண்டலத்தில் […]

Categories
உலக செய்திகள்

இரக்கமற்ற கொரோனா… “தாயாக ஆசைப்பட்ட இளம்பெண்”… இரட்டைக்குழந்தை பெற்ற பின் விழியை மூடிய சோகம்.. கதறும் கணவர்..!!

இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் தாயாக வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இருந்துள்ளார். அவர் ஆசைப்படி அவருக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கொரோனா தோற்றால் அந்த இளம் தாய் உயிரிழந்தார். மிகவும் மோசமான ப்ளூ அறிகுறியால் பாதிக்கப்பட்ட லரிஸ்ஸா என்ற அந்தப் பெண் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் நின்ற பெண்… திடீரென வந்த போன் கால்… செய்திகேட்டு கதறி அழுத பெண்… எதற்கு தெரியுமா?

தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்து பொது இடத்தில் பெண் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதோடு உலக நாடுகள் முழுவதிலும் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா உறுதியானதை தொலைபேசி மூலமாக அறிந்த பெண் பொது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறந்தாலும் பரவாயில்லை…. “கொரோனாவை வென்ற காதல்” வைரலாகும் தம்பதி….!!

கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளைக்கு 1,00,000 பேருக்கு கொரோனா – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் இதே நிலை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஆய்வக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்  உலக நாடுகள் இடையே பரவி வரும் கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தில் அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோணி பாசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற செனட் சபையின் கேள்வி நேரத்தில் பங்கேற்ற அந்தோணி பாசி கூறுகையில், “கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து வந்த “பிளேக்” இது… கையெழுத்திட்ட மை காயவில்லை….. அதற்குள் இப்படி – ட்ரம்ப் விமர்சனம்

சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார் சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில்…. 10 பேருக்கு கொரோனா….. தேவஸ்தான ஊழியர்களுக்கு பரிசோதனை….!!

திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் கடந்த மே மாதம் இறுதி வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திற்கு பிறகு பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், பிரபல கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகளை தொடங்க மத்திய அரசு சார்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா பரவல்” உலக அளவில் 2 வது இடம்…. சென்னை மக்களுக்கு எச்சரிக்கை….!!

கொரோனா அதிகம் பரவும் நகரத்தில் உலக அளவில் 2 வது இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளிலும் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சமீபகாலமாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னை இந்த மூன்று பகுதிகளிலும் […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிக்கு…. ரூ44,00,00,000….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதியை ஒத்துக்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6வது கட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் 98 ஆயிரத்தை கடந்த நிலையில், இதை எதிர்த்து தொடர்ந்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு பொருட்களை வழங்குவது, அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல கொரோனாவா…. வாய்ப்பே இல்லை…. கெத்து காட்டிய அதிபர்….!!

கொரோனாவை முற்றிலும் தடுத்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளில் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வர தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் பரவலை தடுப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உண்மை நிலை இதுதான்….. போட்டு உடைத்த ஆய்வு குழு…!!

அமெரிக்காவில் 25% இறப்பு எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகின்றது இதுவரை அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,78,500 ஆகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,789 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் யேல் பல்கலைக்கழக ஆய்வு குழு அமெரிக்கா உயிரிழந்தவர்களின் உண்மையான […]

Categories
தேசிய செய்திகள்

ஆடுகளுக்கு கொரோனா…? மேற்க்கண்ட பரிசோதனையில் வெளியான உண்மை….!!

ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வளர்த்து வந்த சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆடுகளுக்கும் கொரோனா பரவி விட்டதாக அந்த ஊர் மக்கள் கூறிவந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் உடனடியாக ஆடுகளை பரிசோதனை செய்தனர். அதில் ஆட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மலிவா இருக்கணும்……. நல்லா இருக்கணும்……. மக்களுக்காக முடிவெடுத்த மோடி……!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தடுப்பு மருந்தை கண்டறிய சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் களமிறங்கி தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டறிய தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மரணம்….. உடலடக்கம் இப்படி தான் இருக்குமா…? சர்ச்சையை கிளப்பிய வீடியோ….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதேசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின் அவர்களது உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது புறநோயாளிகள் இரக்கமற்ற முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய […]

Categories
அரசியல்

“முறையான பரிசோதனை இல்லை” வெளியாகும் எண்ணிக்கை பட்டியல் உண்மையா…?

வெளிமாநில, நாடுகளிலிருந்து வருவோருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தொடர்ந்து தமிழகத்தில் விமானம் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, அவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ள படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. அதன்படி வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வீழ்த்திய 114 வயது முதியவர்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 வயது முதியவர் வெற்றிகரமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று அதிக அளவு வயதில் முதிர்ந்தவர்களை  தாக்குவதாகவும் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதிலும் சில அதிசயமான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்பவர் தனது 114 வயதில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தலைகுனிய வச்சுட்டு – அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர்

கொரோனா தொற்று அமெரிக்காவை தலைகுனிய வைத்து விட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா  அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டு, 1,21,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவருகின்றது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்….. 3 பிஞ்சுகளையும் விட்டுவைக்காத கொரோனா….!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது உலக நாடுகளிடையே பரவும் கொரோனா தொற்றால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் கொடிய நோயான கொரோனா தொற்று புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவிடவில்லை. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதனால் தாயும் தந்தையும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர் ஆனால் அவர்களது சந்தோஷம் வெகுவிரைவில் பறிபோனது. பிறந்த […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிடம் தோற்று விட்டோம்” தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர்…!!

கொரோனா தொற்றுக்கு எதிராக நடந்த போரில் தோற்று விட்டோம் என துருக்கி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் துருக்கியில் நடந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சில இடங்களில் தோற்று விட்டோம். ஆனால் இனிவரும் மாதங்களில் நிச்சயம் மீண்டு வருவோம் என அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தொற்றுக்கு எதிராக நடந்த போரில் நாம் தோற்று விட்டோம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் இனிவரும் […]

Categories
உலக செய்திகள்

வெற்றி பாதையில் ரஷ்யா….? கொரோனா தடுப்பூசி ரெடி…? 18 பேருக்கு செலுத்தப்பட்ட மருந்து…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு தன்னார்வலர்கள் மீது பரிசோதனைக்கு செலுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலர்கள் 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தி இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உடல்நிலை குறித்த புகார்கள் எதுவும் வந்ததாகவும் தகவல் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 18 தன்னார்வலர்களும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.60 லட்சம் பேர் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இந்த மீனா….? வேண்டாம்….. தெறித்து ஓடும் சீனர்கள்….!!

விரும்பி வாங்கும் சால்மன் மீன் வெட்டும் கட்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது மீன் வகைகள் எத்தனையோ இருந்தாலும் சால்மன் மீன் என்றால் சீன மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அவ்வகையில் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் சிம்பாடி சந்தையில் சால்மன் மீன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவதால் நார்வே தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த வகை மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இப்படி தான் பண்ணுது….! உலகுக்கே அமெரிக்க ஆய்வு தரும் புது தகவல்….!!

கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு தகவலை அமெரிக்க தேசிய சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ளார் கொரோனா தொற்று குறித்து பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலைக்கு தகுந்தவாறு தொற்றின் தாக்கம் இருப்பது மருத்துவ நிபுணர்களை திணற வைத்து வருகின்றது. இதுகுறித்த ஆய்வு தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் தற்போது வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிக்கு தகுந்தாற்போல் தொற்று மாறுபட்டு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்…கூடுதல் ஊழியர் கேட்கும் மருத்துவமனை….!!

கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி […]

Categories
உலக செய்திகள்

நடுங்கி போன சீனா…. ”கொரோனாவின் 2வது அலை” பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து…!!

சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவ தொடங்கியிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவிய கொரோனா தொற்று பல தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையாக சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் மொத்த விற்பனை சந்தையான சிம்பாடியில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 8,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 தினங்களில் மட்டும் 137 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் மரணம்…. ஊழியர்களுக்கும் தொற்று பரவியதால் அதிர்ச்சி….!!

MGR பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி ஒருவர், இறந்த […]

Categories

Tech |