மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நல சோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆக்ஸஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]
