தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டால் கொரோனா பெரும் பாதிப்பாக தெரியவில்லை என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். மனிஷா கொய்ராலா அவர்கள் தமிழில் மும்பை எக்ஸ்பிரஸ், பாபா, இந்தியன், முதல்வன், பம்பாய், போன்ற படங்களில் நடித்து வந்தவர். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, படங்களிலும் கூட நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இவர் சாம்ராட் தகால் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடத்திலேயே விவாகரத்து வாங்கிக்கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து சில வருடங்களில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். […]
