காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் மூலம் கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தேனி அரண்மனை புதூர் பகுதியிலுள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்ததில் போலியான தனியார் […]
