கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதாரத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களில் சந்தை, கடைகள், மார்க்கெட் என அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் […]
