வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே கொத்தனார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குற்றக்கரை பகுதியில் கொத்தனாரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரக்சன், சாய்சரண் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன்களை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சுபாஷ் கடந்த 16-ஆம் தேதி மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது […]
