50,000 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை காவல்துறையினர் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பில்லூர் பகுதியில் சங்கையா காளீஸ்வரி தம்பதியினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் இல்லாமல் சங்கையா வீட்டில் வறுமையில் வாழ்ந்துள்ளனர். அப்போது காந்தி என்பவரிடமிருந்து 50,000 ரூபாய் பணத்தை குணசேகரன் என்பவர் பெற்று சங்கையாவிடம் கடனுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சங்கையாவுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை அமைந்தது. அதனால் கடனை […]
