புரட்டாசி மாதம் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீன்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதி மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கொண்டிராஜபாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் பொதுமக்கள் அதிகமாக காணப்படுவர். […]
