ஒட்டாண்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதன் வாயிலாக 46 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் கால்நடையின் குடிநீருக்காகவும் இந்த குளம் பயன்படுகின்றது. இந்த நிலையில் கூடலூர் நகரப் பகுதியில் இருக்கும் இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி […]
