மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பப்லு ஜாலா,லட்சுமி (வயது 22) என்ற தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பப்லுவுக்கும், குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனது மனைவியை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொடூர தாக்குதலில் லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். […]
