இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் தேசியக்கொடியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றிருக்கிறார். மேலும், அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததோடு, அன்னிய செலவாணி கையிருப்பும் குறைந்தது. இது வாடகை வாகன ஓட்டுனர்களை வெகுவாக […]
