கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் டேனரிஸ் டாக் டார்கேரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை எமிலியா கிளார்க். இவர் குருதி நாள அலர்ஜி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் தனது மூளைக்கு இரத்தம் செல்வது அடிக்கடி பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக இரண்டு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது நோய் குறித்து பேசிய எமிலியா கிளார்க், தனது மூளையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]
