கொடிகாத்த குமரன் என்று மக்களால் போற்றப்படுபவர் திருப்பூர் குமரன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் பிறந்த இவர் குடும்பச் சூழலால், தனது படிப்பை ஆரம்ப பள்ளியோடு முடித்துக்கொண்டார். பின்னர், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்த குமரன் போதிய வருமானம் இல்லாததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். தனது இளம் வயது முதலே காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். திருப்பூரில், இயங்கி வந்த தேசப்பற்று இளைஞர் […]
