வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால் 50 ஏக்கரில் இருந்த அரிய வகை மரங்கள்,கொடிகள் மற்றும் செடிகள் எரிந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள மூங்கில்பண்ணை, முட்டுக்கோம்பை வனப்பகுதியில் நேற்று மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ விறுவிறுவென பரவியதால் அங்கு இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது . இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை […]
