கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்றி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கொடி கம்பம் சேதமடைந்திருந்தால் அதை மாற்றுவதற்காக நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடி கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]
