பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் வீட்டின் பக்கத்தில் மழைநீர் தேங்காமல் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
