டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]
