தமிழத்தில் நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி,மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகை பதியப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலிலும், பொதுமக்கள் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய […]
