அமெரிக்காவில் வனப்பகுதியில் ஒரு பெண் தன்னை துப்பாக்கியுடன் யாரோ துரத்துவதாக கூறிக்கொண்டு கையில் குழந்தையுடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நேற்று காலை 8:30 மணிக்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண் வனப்பகுதியில் தன்னை ஒருவர் துப்பாக்கியோடு விரட்டி வருவதாக கூறிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது ஒரு புதருக்குள் அந்த பெண் மறைந்திருந்துள்ளார். […]
