கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவன் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
