Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை‌”… நடுக்கடலில் மடக்கிப்பிடித்த கடலோர காவல்படை…!!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கு”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது….!!!!

இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட நான்கு பெண்களை போலீசார் சென்ற 2011 ஆம் வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியில் ஒரு தைலம் மர தோப்பில் வைத்து நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பிளஸ்-2 மாணவி கர்ப்பம்”… தாலியுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்… மடக்கிப்பிடித்து போலீசார் அதிரடி…!!!!!

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார். சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 கோடிக்கு ஆப்பிள்”…. பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி… போலீசார் அதிரடி…!!!!

மொத்த வியாபாரிகளிடம் மூன்று கோடி ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள வீரகம்பாக்கம் பிருந்தாவன் நகர் ரோஜா தெருவை சேர்ந்த தினகரன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட் கடை நடத்தி வருகின்றார். இவர் காஷ்மீரில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து பழங்களை அனுப்பி வைத்ததற்காக மூன்று வியாபாரிகளுக்கு தினகரன் மூன்று கோடி காசோலைகளை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…? போதை பொருள் கடத்த முயன்ற பெண்கள் அதிரடி கைது….!!!!

விமான நிலையத்தில் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் போதைப்பொருள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கையும் களவுமாக  பிடித்தாலும் அவர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தங்களது வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்  பொலிவியா நகரில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொக்கைன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்ட போலீசார்…. தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்…. சென்னை சேர்ந்த 3 பேர் கைது…!!!!

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் பசுவந்தனையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தார்கள். மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான கொள்கை ஊழல்”… அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் கைது…. வெளியான தகவல்….!!!!

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு மீண்டுமாக பழைய மதுபானகொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதையடுத்து டெல்லியின் கலால் கொள்கை 2021-2022 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரி இருந்தார். இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் சென்ற மாதம் 7ஆம் […]

Categories
சினிமா

நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்?….கேள்வி எழுப்பிய நீதிமன்றம்…..!!!!

30 வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுரேஷ் கைதாகி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குதலின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி அளவுகோலை அமலாக்கத்துறை கடைப்பிடிப்பதாக நீதிமன்றம் குறை கூறியுள்ளது. இதனிடையில் ஜாக்குலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, சுகேஷ் மீதான புகார்கள் குறித்து தெரியாது. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரை விற்பனை செய்து மோசடி…. பெண் உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேச எம்எல்ஏ கைது… காரணம் என்ன…? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!!

உத்திரபிரதேச எம்எல்ஏ வை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அதன் பின் அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. இவர் ஐந்து தடவை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மீது சுமார் 50 குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவரது மகனும் மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏவும் ஆன அப்பாஸ் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோதம்: ரயில் நிலையத்தில் இருந்த 8 ரோகிங்கியா அகதிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

மியான்மரியில் உள் நாட்டு போரின்போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அகதிகளாக மாறினர். மியான்மரிலிருந்து வெளியேறி ரோகிங்கியாக்கள் அண்டைநாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வட கிழக்கு மாநில எல்லைகள் வழியே இந்தியாவுக்குள் நுழைந்து போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரிபுரா மாநிலம் அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக இராணுவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சூட்கேசுக்குள் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்”….. அதிகாரிகளின் அதிரடி செயல்…. இலங்கை இளைஞர் கைது…!!!!!!

நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை கிரிக்கெட் வீரர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் சற்று முன் கைது செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வான இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories
உலகசெய்திகள்

“இம்ரான்கான் மக்களை தவறாக வழி நடத்துகிறார்”… துப்பாக்கி சூடு நடத்திய நபர் சொன்ன பரபரப்பு தகவல்…!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“யூடியூப்” பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த 5 பேர்…. போலீசாரிடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் இருக்கும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி கியாஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஜிகனி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதனால் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது…. காதலன் மீது “5 லிட்டர் ஆசிட் உற்றிய பெண்”…. அறுந்து விழுந்த உடல் உறுப்புகள்….!!!!

வாலிபர் மீது திரவியம் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் ஷியாம் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஞ்சலி தினமும் ஷியாமை   போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் அந்த பெண் தனது பெற்றோருடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரவுடியை நம்பி ஏமார்ந்த “பள்ளி மாணவிகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி காலணியில் பிளம்பரான வினு(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று வந்த இடத்தில் வினுவுக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியில் வசிக்கும் மற்றொரு 12-ஆம் வகுப்பு மாணவி அறிமுகமானார். […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார்”…. 52 ஐயர்களை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!!

சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” தந்தை உள்பட 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை மன்னிக்கவும்… “இதற்காக நான் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன்”…? திருடனின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் பொருட்களை திருடிய நபர் மன்னிப்பு கடிதத்துடன் அந்த பொருட்களை திருப்பி ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் பாலக்காட் மாவட்டத்தில் ஷாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து பத்து வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் மூன்று பித்தளை பொருட்கள் போன்றவை திருட்டுப் போய் உள்ளது. இது பற்றி லம்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 1 1/4 லட்சத்துடன் நின்ற முதியவர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய மர்ம நபர்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]

Categories
தேசிய செய்திகள்

“திருக்குர்ஆனை தண்ணீரில் வீசிய முஸ்லிம் நபர்”…. இரவோடு இரவாக தட்டி தூக்கிய போலீஸ்….. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கோஜ் வாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இர்ஷாத் அகமது‌ மிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முஸ்லிம் மதத்தின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆனை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யும்படி காஷ்மீர் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவோடு இரவாக இர்ஷாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இர்ஷாதுக்கு சற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“உர விற்பனையில் 22 லட்சம் கையாடல்”…. அதிரடியாக இளைஞரை கைது செய்த போலீசார்….!!!!!

உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் கிளையில் நாமக்கலை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு சென்ற 2018 ஆம் வருடம் முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்…. வலியில் அலறி துடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அருண்குமார்(32)- வத்சலா (29) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அருண்குமார் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் விவாகரத்து கோரி இளம்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சூலக்கரை வள்ளுவன் நகரில் இருக்கும் தந்தை வீட்டில் இளம்பெண் தனது […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… அப்சர் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளிடம் எப்படி பணம் கேட்கலாம்..?? பெண்ணை மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து மேட்டு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை முருகன் கடனாக வாங்கியுள்ளார். அதில் 17 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்தார். இதனால் மீதி பணத்தை தருமாறு முருகன் வீட்டில் இல்லாத போது அவரது மகளிடம் சுப்புலட்சுமி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!!!

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் சாலையில் தீபாவளி தினத்தில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதோடு, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கையில் வாணவெடியை வடிக்க செய்தார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

“சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டினர்”… 3 பேர் அதிரடி கைது…!!!!!

வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் அசாமில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தேவாலயங்களில் அமைப்பான யுனைடெட் சர்ச் போரம் மூலமாக  திப்ருகார் மாவட்ட நிர்வாகத்தின் உடைய அனுமதியுடன் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கின்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று பேர் வெளிநாட்டினர் சட்டத்தை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து போலீசார் சுற்றுலா பயணிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்”….. 5 பேர் அதிரடி கைது….!!!!

கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய், மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி லாவண்யா. இவர்களின் வீட்டின் முன்பாக கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் எதிரே இருக்கும் வீட்டில் கோழி திருட்டுப் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மேளம் அடிக்க சென்ற இடமெல்லாம் பழக்கம்” இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் அட்டூழியம்…. மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கனங்கோடு கீழ புல்லுவிளை பகுதியில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜேஸ் (26) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஜேஸ் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ரவுடியான சிம்சோனி என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அப்போது ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கத்தியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… இணையதளம் மூலம் பழகிய இளைஞர்… சிறையில் அடைப்பு….!!!!!

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர்  கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த பட்டாசு…. தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது. இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியையிடம் அத்துமீறல்”…. பாலியல் புகாரில் பிரபல எழுத்தாளர் கைது….. கேரளாவில் பரபரப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் சீவிக் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சீவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சீவிக் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்‌. இந்நிலையில் சீவிக் சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை […]

Categories
உலக செய்திகள்

டோராண்டோ தீவு விமான நிலையத்தில் வெடிகுண்டு…? இரண்டு பேர் கைது… பெரும் பரபரப்பு..!!!!

டொரேண்டா தீவு விமான நிலையத்தின் படகு முனையதிற்கு அருகே வெடிக்க கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயில் லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலை கிடைக்காமல் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ பட்டதாரி”…. பல திருட்டு வழக்கு…. போலீசார் அதிரடி…!!!!!

குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்தவருக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்ற போது…. ஆதார் மூலம் வெளிவந்த உண்மை…. பெண் உள்பட 5 பேர் கைது….!!!

போலியான பத்திரம் மூலம் இறந்தவரின் நிலத்தை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான கணபதி என்பவர் 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் கணபதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக முருகன் போலியான பத்திரம் தயாரித்துள்ளார். இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் செல்லம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம்…. மூதாட்டியிடம் 4 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் பவானி என்பவர் ரசித்து வருகிறார். அதே பகுதியில் அருள்ஜோதி, சரண்யா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அருள்ஜோதியும், சரண்யாவும் இணைந்து பவானியின் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் கடனை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“மகனை எரித்துக் கொன்ற தந்தை”… பின்னணி என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரளாவில் மகனை தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியைச் சேர்ந்த சுலைமான்- செரீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் குன்றிய மகன் சதக் என்பவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை செரினா வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டின் வராண்டாவில் சதக் இருந்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான் திடீரென அவரது மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொது கழிவறைக்கு சென்ற பெண்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டு பாடி கலாட்டா…. படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர்கள் கைது…. போலீஸ் அறிவுரை….!!!

படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஹைகோர்ட்டில் வேலை வாங்கி தருகிறேன்” பல லட்ச ரூபாய் மோசடி செய்த அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!!

பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கி தருகிறேன்” 3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(56) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் அறிமுகமானார். இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என சத்யா ஆசை வார்த்தைகள் கூறியதால் தமிழரசி அவரிடம் 1 லட்சத்து 26 ஆயிரத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“லிப்ட்” தருவது போல நடித்து…. இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லாலிதொட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் பண்ருட்டி ராசாபாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து உங்களை ஊரில் இறக்கி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இவர்கள் வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட “140 விலங்குகள்”…. போலீசார் நடவடிக்கை ….!!!!

சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தியா -மியான்மர் எல்லை வழியாக எஸ்.யூ.வி. வாகனங்களில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.யூ.வி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் வாகனத்தில் 30 ஆமைகள், 2  மர்மோசெட் குரங்குகள், 22 மலைப் பாம்புகள், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொகுசு காரில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சட்ட விரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்வர்தீன், ஜோஜோ மற்றும் உசைன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மூன்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழிப்பறியை தட்டி கேட்ட வாலிபர்….. பிரபல ரவுடியின் கொடூர செயல்….. போலீஸ் விசாரணை….!!!

தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளைதர்மம் சுடலை கோவில் மேற்கு தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷா(21) என்ற மனைவி உள்ளார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மனைவியை வங்கியில் இருந்து அழைத்து வருவதற்காக தினேஷ்குமார் உறவினரின் காரில் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரபல ரவுடியான மணிகண்டன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் கேட்டு தினேஷ் குமாரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொள்ளையடிப்பதற்கு 5 டிப்ஸ்” 1000 செல்போன்களை திருடிய அபூர்வ சிகாமணி கைது….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார்‌‌. அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]

Categories

Tech |