Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10- ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் என்ஜினீயரிங் மாணவர் கைது..!!

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான  சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள்  வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட வந்த இடத்தில் தூங்கிய இன்ஜினியர் …!!மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்..!!

திருட வந்த இடத்தில் போதையில் தூங்கியதால் இன்ஜினியர் வசமாக காவல்துறையிடம் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அருகே  அடையாளம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். 53 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.வசித்து வரும் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் பிளம்பரை வரவழைத்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதை கண்டு நீ யார்? எனக் கேட்டார் சற்றென்று அந்த வாலிபர் வீட்டு மாடியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களிடம் செயின் பறிப்பு சொரி விஜய் அண்ட் கோ கைது ….!!

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லக்ஷ்மி வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டுருந்தார். இவர் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனியாக நடந்து சென்றபோது இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் அவரது தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞர் மற்றொருவரிடம் செயினை ஒப்படைத்துவிட்டு மாயமானார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் கைது..!!

நெல்லை அருகே பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த திரு அன்பு என்பவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டா மாறுதல் தொடர்பாக துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திரு அன்பு புகார் செய்துள்ளார். இதன்பேரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

7 நாட்களில்… 47 ரவுடிகள் கைது… காவல்துறை அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை 7நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த 47 ரவுடிகளை 7 நாட்களில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” காஞ்சிபுரம் சரக காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை கடந்த 7 நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

வலைவீசி தேடி வந்த போலீசார்… பல ஆண்டுகளுக்கு பின் சிக்கிய 5 குற்றவாளிகள்.!!

திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பல வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டி பகுதியில் 1987 ஆம் வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அவர்களில் 3 பேர் கைதான நிலையில் செல்லதுரை மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் செல்லதுறையை தேடப்படும் குற்றவாளி என […]

Categories
உலக செய்திகள்

குழந்தை, கணவர் முன்னிலையில்…. கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை… கொந்தளித்த மக்கள்

கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஜோ-லீ  எனும் கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் காவல்துறையினரால் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு எதிர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தை தூண்டிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் கர்ப்பிணி பெண் என்று கூடக் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதங்களுடன் வந்த நபர்கள்… கம்பியெண்ண வைத்த போலீஸ்…!!

பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி  பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை […]

Categories
உலக செய்திகள்

17 வயது மாணவனை… “அழைத்துச்சென்று அத்துமீறிய ஆசிரியை”… 18 மாதங்களுக்கு பின் தூக்கிய போலீஸ்..!!

18 மாதங்கள் பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட உயர்நிலை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் செர்ரி ஹில் பகுதியை சேர்ந்த பிரிட்ஜெட் சிபிரா என்ற உயர்நிலை ஆசிரியை கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 18 மாதங்கள் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவனை மயக்கி பல இடங்களுக்கு அழைத்து சென்று அவனிடம் தவறாக நடந்துள்ளார். இதுவரை 60 முறை சிறுவனை அந்த ஆசிரியை அழைத்துச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ரகசியங்கள் “திருட்டு”… சீனா ஆராய்ச்சியாளர் கைது…!!

சீன ஆராய்ச்சியாளரான ஹைஜோ ஹூ அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அவர்களுக்கு இடையேயான உறவு வலுவிழந்து போகிறது. இதற்கு காரணம் சீனா சட்டத்திற்கு விரோதமாக உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து, டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை  அமெரிக்கா மூட உத்தரவிட்டது. சீனா இதற்கு பழிக்குப்பழி வாங்கும்  நோக்கத்தில் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சிக்கிய சீன விஞ்சானி…. கைது செய்த அமெரிக்கா…. மிரளும் சீனா …!!

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நாட்டின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குவான் லீ என்பவர் தனது வீட்டு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் சேதமடைந்த டிரைவை எறிந்ததற்காக அமெரிக்க நாட்டின் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு மிக முக்கியமான தொழில் நுட்பமென்பொருள் அல்லது அமெரிக்க தரவை மாற்றி அமைப்பதற்காக குவான் லீயிடம் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மனைவியை கொன்ற இந்திய தடகள வீரர்… தற்கொலைக்கு முயற்சி.. கைது செய்த போலீஸ்..!!

முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் 1983-ம் வருடம் குவைத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு ஏறிந்து  வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றவர் இக்பால் சிங். தற்போது 62 வயதான இவர் அமெரிக்கா சென்று குடியேறி, தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வரும் இவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாகிஸ்தான் நபர் கைது..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்த காத்திருந்த “தீவிரவாதி”… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு முக்கிய வீதிகளை உலவு பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்த எண்ணிய நபர், குக்குசெக்மீஸ் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது அவரை செய்தனர். மேலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றரை கிலோ தங்கம் கடத்தல்… சோதனையில் சிக்கிய நபர்…!!

விமானம் மூலம் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட பொழுது ஒரு நபர் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த விமான பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்பொழுது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயது நபரின் உடமைகளில் 10 […]

Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அத்துமீறல்”… 10 லட்சத்தை எட்டிய கைது எண்ணிக்கை…!!

ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களின் கைதான எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை அத்துமீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை தமிழகம் முழுவதும், 9 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேர் […]

Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு மீறல்”… 9 லட்சத்தை தாண்டிய கைது எண்ணிக்கை… போலீசார் அதிரடி…!!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்களிடமிருந்து 21 கோடிக்கு மேல் காவல்துறையினர் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஊரடங்கை மீறி நடப்பவர்களின்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும், 9,80,398 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மாலி அதிபர் மற்றும் பிரதமர் கைது… விடுதலை செய்ய ஐநா கோரிக்கை…!!!

கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதி நகரத்தில் அமைந்துள்ள ராணுவத் தளம் அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வந்துள்ளன. அது ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பதற்கான சதியாக இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

மாலியில் ஏற்பட்ட ராணுவ புரட்சி… அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் கைது…!!!

மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பாபுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவுகும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எதிராக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளியை அடித்துக் கொன்ற 3 திருநங்கைகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மனிதத் தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெல்லி சாலையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது வீட்டின் அருகே இடுக்கில் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மனித தலை இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் அதே இடத்தில் அந்த கோணிப் பையை வைத்துவிட்டு, தனது வீட்டிலிருந்து கவனித்துள்ளார். அப்போது அருகே உள்ள பாழடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் பேஸ்புக் வன்முறை … மேலும் 60 பேர் கைது… இதுவரை கைது எண்ணிக்கை 206 ஆக உயர்வு ….!!

பெங்களூரில் வன்முறை நடைபெற்றது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட  மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி சென்ற திங்கட்கிழமை பெங்களூருவில் 100க்கும் மேலானோர் திரண்டு எம்.எல்.ஏ.வின் வீட்டையும், 2 காவல் நிலையங்களையும் தாக்கியது மட்டுமில்லாமல் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தி கலவரமாக்கினர். இந்த வழக்கில் 146 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போதைப் பொருள் கடத்திய பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் காரில் அபின் கடத்தியதாக பாஜக மாநில நிர்வாகி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பெரம்பலூர் மாவட்டங்களில் போதைப் பொருளான அபின் கார் மூலம் கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சென்னை நெடுஞ்சாலையில் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது பெரம்பலூரில் கார் ஒன்றில் அபின் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவது தெரிய […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியையை நெஞ்சில் குத்திய 8 வயது சிறுவன்… கைது செய்த போலீசார்… பின் நடந்தது என்ன?

பள்ளிக்கு வந்த காவல் அதிகாரிகள் சிறுவன் ஒருவனின் கையில் விலங்கை மாட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவன் தனது இருக்கையில் அமராமல் சேட்டை செய்து வந்துள்ளான். அவனிடம் ஆசிரியர் சரியாக அமர வற்புறுத்தியும் சிறுவன் எனது தாய் வந்து உன்னை அடிப்பார் என கூறி அவனது ஆசிரியை நெஞ்சில் குத்தி உள்ளான். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த காவல் அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி, குழந்தை வெளிநாட்டில்… தலாக் சொல்லிவிட்டு வேறொரு பெண்ணுடன் மும்பை வந்த கணவன்… மடக்கிப்பிடித்த போலீஸ்..!!

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முகமது அலி என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சவுதி அரேபியாவில் இருக்கும் தம்மம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 3ம் தேதி தனது மனைவி மற்றும் மகளை தம்மமில் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மும்பைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக்கின் மனைவி தனது முகநூல் பதிவு மூலமாக தனது […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் இளைஞரின் கையில் போதைப்பொருள்… கைப்பற்றிய காவல்துறை…!!!

ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சா சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அதனை ஜெர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும்  குற்றச் செயலாகும். லார்ராக்கில் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தட்டிக் கேட்டதால் தகராறு… சிறுவன் உட்பட 5 பேர் கைது….!!

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலை அளித்த சிறுவனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர்கள் ராஜா, சுப்பிரமணி, பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் காந்தாமணி, அருணாச்சலம், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை  சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து மதம் குறித்து அவதூறு…. பிரபல இயக்குனர் கைது….!!

திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் மீது இந்து மதம் பற்றிய அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் இந்து மதம் குறித்து தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது பாரத் முன்னணி புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வைத்து இயக்குனர் வேலுபிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மத்திய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி… நள்ளிரவில் பற்றி எரிந்த ஏடிஎம்… வட மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வங்கி ஏடிஎம் மையத்தில் சென்ற ஐந்தாம் தேதி அதிகாலை திடீரென தீ பற்றிய காரணத்தால் அதில் இருந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளிடம் தவறாக நடந்துகொண்டார்… தாய் பரபரப்பு புகார்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் அதிரடி கைது… 8 சவரன் நகை, 8 பைக்குகள் பறிமுதல்..!!

சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் சென்ற பத்தாம் தேதியன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ,இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை ஒன்றை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவம் படிக்காமல் கிளினிக்…. சோதனையில் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் நோயாளிகள்….!!

செம்பட்டி பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி மருத்துவர்கள் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டி என்ற பகுதியில் பெருமாள் என்பவர் வசித்துவருகிறார்.அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மற்றும் செம்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவிகளுக்குள் தகராறு…. 4 பேருக்கு கத்தி குத்து….. ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் ராணுவ வீரர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்த கொட்டபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான சரவணன் மற்றும் சின்னராஜ். இந்நிலையில் சரவணன் மனைவி கண்ணம்மாள் என்பவருக்கும், சின்னராஜ் என்பவரின் மனைவி தேவி என்பவருக்கும் நிலத்தில் மாடு மேய்ப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் வாய்த்தகராறு முதற்கட்டமாக ஏற்பட்டு, பின் சண்டை முற்றவே, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் …!

பணம் வைத்து சீட்டு விளையாட்டில் சூதாடியதால் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமிர்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு  சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில்  உள்ள வீட்டில் திடீரென நுழைந்த சோதனைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியாகியது. […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட்டில் இருந்த கணவன்… வீட்டுக்குள் நுழைந்து மனைவி அரங்கேற்றிய சம்பவம்… கேள்விக்குறியான வாழ்க்கை..!!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்து மீது ஆசை… கணவன், மாமனாரை கொலை செய்த மனைவி… சிக்கிய முக்கிய குற்றவாளி… வெளியான பகிர் தகவல்.!!

சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவன்… இரவில் வீடு புகுந்து தூக்கிவிட்டு… பின் அவனை விடுவித்த போலீஸ்… இதுதான் காரணமா?

12 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய்களுடன் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிரிட்டனில் ஒருவர் தான் கருப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்ததாக போலீஸில்  தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இரவு 11 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடனும் மோப்ப நாய்களுடனும் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். இரவு நேரம் வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து kai என்ற 12 வயது சிறுவனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனை கைவிலங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை… கம்பால் அடித்து கொன்ற மகன்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி..!!

தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

சிரித்தபடி இளம்பெண்களுக்கு வணக்கம்..! பின் இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

இனிய முகத்துடன் பெண்களுக்கு வணக்கம் கூறி பின்னர் கொடூரமாக வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெர்மனியில் நபரொருவர் இளம்பெண்களுக்கு இன்முகத்துடன் வணக்கம் சொல்லி பின்னர் மிகவும் கொடூரமாக அவர்களை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. ஜூன் 12 க்கு பிறகு பெர்லின் மற்றும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளில் எட்டு பெண்கள் அந்த நபரிடம் சிக்கியுள்ளனர். அடர்ந்த புதர்கள் இருக்கும் பகுதியின் அருகே செல்லும் பெண்களுக்கு இனிய முகத்துடன் அந்த நபர் வணக்கம் கூறி பின்னர் மிகவும் கொடூரமாக […]

Categories
உலக செய்திகள்

“சோதனை செய்யாமல் கொரோனா முடிவு”… தப்ப முயன்ற மருத்துவமனை உரிமையாளர்… மடக்கிப்பிடித்த போலீஸ்..!!

கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழிக்கு பழி” தொடர் கொலைகள்….. இறுதி சம்பவத்தில்…. 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது….!!

திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு…. வேறொரு பெண்ணுடன் நிச்சயம்…. வாலிபர் கைது…!!

தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுப்பா… “கண்டித்த குடும்பத்தினர்”… நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய இளைஞர்.. பரிதாபமாக இறந்த இளம்பெண்..!!

முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி […]

Categories
உலக செய்திகள்

350 கி.மீ பயணித்து.. உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி கொடூர கொலை… விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு  சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது […]

Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் […]

Categories

Tech |