Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கும்பல் 13 பேர் கைது… மரண தண்டனை…!!

 இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வருகின்றது. அந்நிலையில் அங்கு சென்ற ஜூன் மாதம் போதை பொருள் கடத்தப்பட்டதாக 13 பேர் கொண்ட ஒரு கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர். அதில் 3 ஈரானியர், பாகிஸ்தானியர், 9 இந்தோனேசியர்கள் போன்றோர் சிக்கியுள்ளனர். அந்த போதை பொருள் கும்பலிடம் 400 கிராம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. குடும்பத்தாரின் கொடூர செயல்..!!போலீசாரால் கைது .!!

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் கிராம மக்கள் கொடூரமாக தண்டனை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் 21 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞனுக்கு மட்டுமல்லாது சிறுமிக்கும் தண்டனை கொடுக்கும் விதமாக அடித்து பொது இடத்தில் வைத்து கொடுமை செய்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகள் ..கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு ..!!போலீசாரால் கைது ..!!

அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகளிடமிருந்து காரை காப்பாற்ற முயன்றவர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 66 வயதான முகமது அன்வர் என்பவர் உபேர் இட்ஸ் நிறுவனத்திற்காக கார் ஓட்டி கொண்டிருந்திருக்கிறார் .அப்போது திடீரென்று காருக்குள்  தென்கிழக்கு வாஷிங்டன் டிசியை சேர்ந்த  13 வயது சிறுமி மற்றும் போர்ட் வாஷிங்டன் என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இருவரும் அன்வரை மின்சாரம் கொடுக்கும் கருவியால் தாக்கி காரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மிரட்டல் கடிதம் ..!!விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி கொலை செய்த சம்பவம் ..!!போலீசால் கைது .!!

கனடாவில் வீட்டின் முன் விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி உயிரை எடுத்த ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடாவில் அல்பேர்ட்டாவிலுள்ள மெடிசின் ஹாட் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அவரையும் அவரின் மனைவியும் ஏதோ ஒரு கும்பல் கண்காணித்து வருவதாகவும் தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் எழுதியிருந்தது .அப்படி பணம் தரவில்லை என்றால் அவரின் உறவினர்களை கொல்வதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை கடத்திய மர்ம நபர் ..அருகில் வந்தால் வெடிக்க வைத்துவிடுவதாக மிரட்டல்..!! போலீசாரால் கைது ..!!

ஆப்பிரிக்காவில் மர்ம நபரால்  விமானம்  கடத்தப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா தலைநகரமான நோவக்ச்சோட்டடில் மௌரிட்டானிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடத்துவதற்காக விமானத்திற்குள் நுழைந்துள்ளார் .பிறகு அந்த மர்ம நபர் விமான உரிமம் தனக்கு வழங்குமாறு விமான அதிகாரிகளிடம் கூறியுள்ளார் .மேலும் பாதுகாப்பு படையினர் அருகில் வந்தால் விமானத்தை வெடிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான். விமானத்தை கடத்தியவன் அமெரிக்க குடிமகன் என்று கூறப்படுகிறது. விமானம் கடத்தப்பட்டதை  தொடர்ந்து பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வேலை பார்த்த நிறுவனத்தின் மீது ஏற்பட்ட கோபம்… 1200 வாடிக்கையாளர்களின் கணக்கை முடக்கிய வாலிபர் கைது..!!

ஐடி நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தீபன்ஷிகெர் என்ற இளைஞன் அமெரிக்காவிலுள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி முறியடித்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு …1200 கணக்குகள் முடக்கம் ..வெளியான பின்னணி …!!!

இந்தியாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்க வைத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த தீபன் ஷுகெர் என்பவர் வசித்து வருகிறார்.அவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் கணக்குகள் சரி பார்க்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் நிர்வாகத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்குள்ள வாடிக்கையாளர்களின் 1200க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார். உடனடியாக அந்தவாடிக்கையாளர்  ஏன் கணக்குகளை முடக்கி வைத்துள்ளீர்கள் என்றுஅந்த நிறுவனத்திடம்  கேட்டுள்ளனர்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் கருணாஸ் சற்றுமுன் கைது…. பெரும் பரபரப்பு…!!!

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினை சேர்ந்த கருணாஸ் சற்றுமுன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புகார் அளிக்க வந்த பெண்ணை…. இப்படியா செய்வது…? துணை கமிஷனர் கைது..!!

ஜெய்ப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த கைலாஷ் சந்த் போக்ராவை புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல்துறை துணை கமிஷனராக கைலாஷ் சந்த் போக்ரா சிறப்பு விசாரணை பிரிவில் பணியாற்றி வருகின்றார். அதுதொடர்பாக இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட மூன்று புகார்களை அளித்தபோது, இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையைக்  கொடுக்க வேண்டும் என்று  […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளம்பெண் அடித்து கொலை ..காதலன் போலீசாரால் கைது ..!!

கனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலுள்ள மொண்ட்ரியலை சேர்ந்த 29 வயதான ரிபாக்கி ஹரி வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்றபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரிபாக்கி இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் 32 வயதான பிராண்டன் மெக்லிண்டயர் எனும் அவரின் காதலனும் இருந்துள்ளார். பிறகு ரிபாக்கி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே பிராண்டன் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் தன்னார்வலராக இருந்த நபர் செய்த மோசமான செயல் ..7 வருடங்களாக பாலியல் குற்றம் ..!!போலீசாரால் கைது ..!!

கன்னடா தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்தவர் பாலியல் ரீதியாக குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொரன்ரோவில் உள்ள மிசன்  கிரொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் 62 வயதான ஜோஸ் போர்டிலோ தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தேவலாயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியான குற்றம் செய்து உள்ளார். இவர் கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரை இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறு… போலீசுக்கே கொலை மிரட்டலா… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள்..!!

அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின்  போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்  பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள்  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை ஏன் கிழிச்சீங்க”… அவர இப்போ விடுதலை பண்ணணும்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருமயம் பகுதியில் சுவரொட்டி  தகறாரில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  திருமயம் பகுதியில் தகர கொட்டகை பகுதி உள்ளது. அப்பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கிராம உதவியாளர் ரமேஷ் அதை அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில், காவல்துறையினர் ஐந்து பேரில் […]

Categories
மாநில செய்திகள்

வித்தியாசாமான முறையில் தங்கத்தை கடத்தியவர்கள் ..சோதனையில் சிக்கினர்..!!போலீசாரால் கைது ..!!

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஃபிளை துபாய் எப் இசட் 8515 துபாயிலிருந்து  சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் இருவரின் தலைமுடி சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி பிறகு அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளிகளில் 698 கிராம் எடை […]

Categories
உலக செய்திகள்

“உன் வீட்டுக்கு வந்து உன்னை சீரழிச்சுடுவேன்”… இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்… சிறையில் கம்பி எண்ண வைத்த நீதிபதி…!!

லண்டனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று  மிரட்டல் விடுத்த இளைஞனுக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த மார்க் ரோனால்ட்சன் என்ற நபர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த சென்றுள்ளார். அந்த பெண் மார்க்கிடம் ஏன் என்னை பின்தொடர்கிறாய்?  என்று கேட்டுள்ளார். அதற்கு மார்க் அந்த பெண்ணை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டு உன் வீட்டிற்குள் வந்து உன்னை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..!! 17 வயது மாணவியை கொலை செய்த 19 வயது மாணவன்… என்ன காரணம்…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ்  மூலம் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர்…. பெரும் பரபரப்பு….!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்  துணை ஜனாதிபதியாக பதவியில்  இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தனது பாதுகாப்பில் இருந்த சீறாரின் மீது பாலியல் தாக்குதல் ..53 வயது நபர் போலீசாரால் கைது ..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது பாதுகாப்பிலிருந்த சீறார் மீது பாலியல் ரீதியான தவறு செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹர்ட்சன் கவுண்டியை சேர்ந்த 53 வயதான பிரான்சிஸ்கோ எஸ்பினல்  என்பவர் தனது பராமரிப்பில் இருக்கும் 15 வயது சீறாரிடம் பலமுறை பாலியல் ரீதியான தவறு செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரான்சிஸ்கோவை  நேற்று போலீசார் கைது செய்தது.மேலும் வரும் 24ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… இளைஞனிடம் மோசடி…. 7 பெண்கள் கைது… போலீசார் அதிரடி..!!

டெல்லியில் ஏழு பெண்கள் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே டெல்லி காவல் நிலையத்தில் ஒருவர் பணமோசடி புகார் அன்று அளித்தார். புகாரில் தனியார் நிறுவனத்தில்  விமான நிலையங்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முன் பணமாக 2500 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் பணத்தை அனுப்பினேன் . ஆனால் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் முன்பு காய்ந்து கொண்டிருந்த பெண்ணின் உள்ளாடை… திருடி சென்ற வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேசத்தில் வீட்டின் முன்பு காயப்போட்டிருந்த உள்ளாடையை இளைஞர்கள் வேடிக்கையாக திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் சதார் காவல் நிலைய பகுதியில் சஞ்சய் சவுத்ரி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை கேட்ட போலீசார் திகைத்து போயினர்.அதில் , என் மகளின்  உள்ளாடைகளை துவைத்து எங்கள் வீட்டின் முன் காயவைத்து இருந்தோம் . அதனை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அதைஒரு  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமானவர் செய்யும் காரியம்மா… ? நட்புடன் பழகிய மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்… போலீஸ் விசாரணை…!!

சீலநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர்  திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . மேலும் அப்பகுதியில்  கட்டிடம் கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில்  ஐயப்பன் , வீராணம் பகுதிக்கு  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  குடியேறினார். அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும்  ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்புடன் பழகி வந்த ஐயப்பன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்… மொபட்டில் சிக்கிய பொருள்… வாலிபர் கைது..!!

வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்  மகேந்திரகுமார் , ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில்  பலசரக்கு கடை வைத்திருப்பதும் […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன் ..!!வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் ..!போலீசால் கைது .!

அமெரிக்காவில் 14 வயது சிறுவனால்  கடத்தி கொலை செய்யப்பட்ட  6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இண்டியானாவை  சேர்ந்த 6 வயது சிறுமியான கிரேஸ் ரோஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போயுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் .சிறுமி  காணாமல் போன 2 மணி நேரத்திலே அவர் உயிரிழந்து உடல் மரங்கள் அடர்ந்த பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடிக்கணக்கில் மோசடி…. பிரபல இசை அமைப்பாளர் கைது…!!

பழம்பெரும் நடிகையின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லிசாப்ளின்2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஸ். இவர் பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் மகன் ஆவார். இந்நிலையில் இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது உடைய நெடுமாறன் என்பவரிடம் பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரிஸ் அறியவகை இரிடியம் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! யாரையும் நம்பி உங்க குழந்தைகளை விடாதீங்க… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள விண்டம் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம்  விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ” தன்னை பராமரித்துக் கொள்ளும் நபர் என்னை தவறான பகுதியில் தொடுகிறார் என்று கூறியிருக்கிறார். அவர் […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்ஸர்லாந்தில் மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த கணவன் கைது ..!!

சுவிட்சர்லாந்தில் குடும்ப பிரச்சினையால்  மனைவியை கொடுமைப்படுத்திய 46 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறையால் மனைவியை துன்புறுத்தி அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த கொடூர சம்பவம் ஆர்காவ் மண்டலத்தின் schafisheim  பகுதியில் நடந்துள்ளது . சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததால் போலீசார் விரைந்து வந்து பார்க்கும்போது 44 வயதான பெண்ணொருவர் மூச்சின்றி கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனையடுத்து சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண்ணிற்க்கு மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளது . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஹொரி கவுண்ட்டியை சேர்ந்த இளம்பெண் தன் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு அந்த நண்பர் அங்கிருந்து கிளம்பியவுடன் மனவேதனை காரணத்தால் அப்பெண் அதிகமாக  மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் போதையிலேயே இரவு படுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது தன் ஆடைகள் சிதறி கீழே கிடந்ததை பார்த்தும் […]

Categories
உலக செய்திகள்

“ஆசை காட்டி மோசம் செய்த பெண்”… குடும்பத்தினரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை… இறுதியில் வெளிவந்த மோசடி திட்டம்…!!

லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கேறிய போதை”… விமானத்தில் உடையை கழற்றி ரகளை செய்த பெண்… பயணிகளின் உதவியுடன் ஊழியர்கள் செய்த செயல்…!!

விமானத்தில் ஆடைகளை கழற்றி ரகளை செய்த பெண்ணை விமானத்துறை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். Vladivostok என்ற பகுதிக்கு ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் அங்குமிங்கும் நடந்துள்ளார். பிறகு தனது ஆடைகளை கழற்றி கழற்றி அணிந்துள்ளார். விமானக் குழுவினர் எச்சரித்தும் கேட்காமல்  அவர் தனது ஆடை முழுவதையும் கழட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்து  விமான பணிப்பெண்களும்  பயணிகளும் அந்தப் பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்ணை…” 3 நாட்கள் அடைத்து வைத்து சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்”… கொடுமை..!!

ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் விடுதியின் கழிப்பறை அருகே…” அடிக்கடி நிர்வாணமாக நிற்கும் இளைஞன்”… அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் பெண்கள் விடுதியின் கழிவறைக்கு அருகில் 24 வயதான இளைஞன் ஒருவன் நிர்வாணமாக நிற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் ரைஸுர் லின்சுகூர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே பெண்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்று உள்ளது. அந்த இளைஞன் பெண்கள் உபயோகிக்கும் கழிவறைக்கு அருகில் பல நேரங்களில் நிர்வாணமாய் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளான். பெண்கள் தனியாக கழிவறைக்கு  செல்லவே பயந்து வந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பணத்தை வச்சுக்கோ…! யாரிடமும் சொல்லாத…. 11வயது சிறுமியிடம் அத்துமீறல்… அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் 16 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் செய்த நபரை ர் போலீசார் கைது செய்துள்ளது . புளோரன்ஸ் கவுண்டியை சேர்ந்த 50 வயதான டிவைன் முல்ட்ரோ என்பவர் 11 வயது சிறுமியை கடந்தாண்டு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியிடம் டிவைன் பணம் கொடுத்து வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் இப்போது வெளியே வந்த நிலையில் டிவைனை போலீஸ் கைது செய்துள்ளது . மேலும் […]

Categories
உலக செய்திகள்

USAவில் நடந்த அசிங்கம்… 14வயது சிறுவனுக்கு தொல்லை…! கர்ப்பமான 23வயது இளம் பெண்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் பாராகவ்வுள்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதான பிரிட்டனை கிரே என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி  கர்ப்பமுற்று உள்ளார். ஏற்கனவே கிரே 18 வயது உட்பட்ட சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை பார்த்த நபர் செப்டம்பர் 29, 2020 அன்று போலீசில் புகார் […]

Categories
உலக செய்திகள்

சீச்சீ…”15 வயசு பையன் கூட தனிமையில் இருந்த 35 வயசு டீச்சர்”… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் பள்ளி ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள பள்ளியில் 35 வயது நிரம்பிய காண்டீஸ் பார்பர் என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை காண்டீஸ் பார்பர் தன்னிடம் பயிலும் 15 மாணவன் மீது அளவுக்கு மீறி அன்பு செலுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் மாணவனுடன் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவனுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே….10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் … மாணவன் கைது..!!

திருவையாற்றில் சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி  மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். திருவையாறில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அம்மாணவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். சம்பவ தினத்தன்று அம்மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த […]

Categories
உலக செய்திகள்

தீ வைத்து எரிக்கப்பட்ட “தாய்லாந்து அரசரின் புகைப்படம்”… இசையமைப்பாளரை கைது செய்த போலீஸ்…!!

தாய்லாந்து அரசரின் புகைப்படம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் இசையமைப்பாளரும், தன்னார்வலருமான அம்மி கெய்பிபூன்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் அரசராக இருப்பவர் மகா வஜிரலோங்க்கார்ன். இவரது கட்டுப்பாட்டில் தாய்லாந்து ராணுவம் உள்ளது. எனவே மகா வஜிரலோங்க்கார்ன் தனது கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்தை விடுவிக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவர்கள் போராட்டத்தில் அரசரை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதனால் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சமீபத்தில் காவல்துறையினர் கைது […]

Categories
உலக செய்திகள்

தாயின் கொடூரச் செயல்… இரக்கமின்றி 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் … போலீசால் கைது .!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் தாயே தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைது செயப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையை பிரம்பால் அடித்தும் , ஒரு கையால் குழந்தையை தூக்கி சென்றும் துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் கணவர் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார் .அந்த பெண்ணின் சகோதரன் அவர் குழந்தையை துன்புறுத்தும் செயலை கண்டு உடனே அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார் . https://twitter.com/PTTVOnlineNews/status/1366960627789361154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366960627789361154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F94930%2FMother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் மேனேஜரின் சில்மிஷம்…. ஆபாச படம் காட்டி பணம் பறிப்பு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாகூரைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் அங்கு செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணி புரிவதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்த பங்கஜ் பாட்டில் என்பவர் அப்பெண்ணை நேர்காணல் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்கஜ் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின் அந்த பெண்ணுடன் பங்கஜ் நெருங்கி பழகியுள்ளார்.சில […]

Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு சிறப்பு அறை தயார்… என்னென்ன அம்சங்கள்?… வெளியான தகவல்…!!!

 லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் நிரவ் மோடியை இந்தியாவில் உள்ள சிறையில் அடைப்பதற்கு சிறப்பு அறை தயாராக உள்ளது. குஜராத்தில் மிகப்பெரிய பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர் முறைகேடாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் அதனை காட்டி 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார். மேலும் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” விதிமுறையை மீறிய காதல் தம்பதி … நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதாகப்போகும் பிரபல நடிகர்… பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் புகார்… வெளியான பரபரப்பு தகவல்.!

நடிகர் “மதுர் மிட்டல்” பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் “மதுர் மிட்டல்” ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் நெருக்கமாக பழகி வந்த பெண் ஒருவர் மதுர் மிட்டல் தன்னை அடித்து துன்புறுத்தி, மோசமான வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் மகன் செய்யும் செயலா….? பல நாட்களாக நடந்த அடாவடித்தனம்…. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]

Categories
தேசிய செய்திகள்

5ஆண்டுக்கு முன்பே விவாகரத்து…! அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிய பெண்… தீடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை விவாகரத்து செய்து வேறு நபரை திருமணம் செய்யவிருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நீலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். இதற்கிடையில் ரவி என்பவருடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீலம் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நீலம் கழிவுநீர் […]

Categories
உலக செய்திகள்

“Dating app-ஆல் வந்த வினை”… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… 2 ஆண்டுகளுக்கு பின்பு கம்பி எண்ணும் இளைஞன்…!!

15 வயது சிறுமியிடம்  இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Isaih Ramirez என்ற 20 வயது நபருடன் 15 வயது சிறுமி ஒருவர்  நட்புடன் பழகி உள்ளார். அதற்குப் பிறகு  கடந்த 2019ஆம் ஆண்டு Isaih Ramirez  அந்த சிறுமியுடன் டேட்டிங் சென்றுள்ளார். டேட்டிங் சென்ற இடத்தில் அவர் 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்ததுடன் தவறான முறையில் நடந்துள்ளார் .  இரண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி உடலில் 20காயங்கள்…! வெறி செயலில் ஈடுபட்ட கணவன்… கோவை சம்பவ பின்னணி …!!

கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிர்ச்சி…! ”1இல்ல.. 2இல்ல” 5 பெண்களிடம்…. சிக்கிய 14வயது சிறுவன் …!!

பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் . கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள  லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி”….! 20ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் கைது… புகார் கொடுத்த மாணவிகளின் பின்னணி…!

20 வருடங்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கனடா கேல்கரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1986ல் இருந்து 2016 வரை மைக்கேல் ஆண்ட்ரீசன் என்ற 57 வயது ஆசிரியர் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் போலீசிடம் வந்து கடந்த 2001-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்தார். இதேபோல 1999 முதல் […]

Categories
உலக செய்திகள்

“3 வாரங்களில்,5 பெண்கள்”… 14 வயது சிறுவன் செய்த சில்மிஷம்…. கைது செய்த போலீசார்…!

பிரிட்டனில் 3 வாரங்களில் 5 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் மூன்று வாரங்களில் 5 பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயதான பெண் ஒருவரிடம் சிறுவன் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதேபோல 29 வயதுடைய ஒரு இளம் பெண்ணை பின்தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளார். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தையா ?… சைக்கோவாக மாறிய பாட்டி ..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை  கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை  சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த  குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடையை மீறி லாட்டரி விற்பனை…. காவல்துறைக்கு வந்த தகவல்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

சத்திரம்பட்டி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டை சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலையடுத்து சத்திரம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்த ராஜகுலராமன் காவல்துறையினர் விசாரணை […]

Categories

Tech |