Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது… போலீசார் அதிரடி!!

டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி லட்சுமி நகரில் இந்தியர் என்ற போலி  அடையாள அட்டையுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடமிருந்து ஏ.கே 47  துப்பாக்கி, கையெறி வெடிகுண்டுகள், 2 பிஸ்டல் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பயங்கரவாதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Relevant provisions of Unlawful Activities (Prevention) Act, Explosive Act, Arms Act & […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க… கிரெடிட் கார்டு மோசடி… 90 ஆயிரம் இழந்து தவிக்கும் இளைஞர்…!!!

வங்கியின் கஸ்டமர் கேர் சர்வீஸ் பணியாளர்கள் போல் பேசி பணத்தை பறித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தனது வங்கி கிரெடிட் கார்டை உபயோகிக்க முடியாத காரணத்தினால், ட்விட்டர் பதிவின் மூலமாக வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அன்றைய தினமே தோல்வி எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கியின் கிரெடிட் கார்ட் சேவை பிரிவில் இருந்து வாடிக்கையாளர் சேவை […]

Categories
தேசிய செய்திகள்

அவரை கைது பண்ணும் வரை…. உண்ணாவிரதம் இருப்பேன்…. பிரியங்கா காந்தி…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்  மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிராதிபதியாக வெளியே வருவேன்…. எம்பி ரமேஷ் பேட்டி…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்ற முதியவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பனிக்குப்பத்தில் உள்ள கடலுார் திமுக எம்பி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, […]

Categories
தேசிய செய்திகள்

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமி… லாட்ஜுக்குள் வைத்து அரங்கேறிய கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமியை லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முகநூலில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டு பேசிக் கொண்டுவந்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி சிறுமியை மங்களூரு நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரும்படி […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் தரையில் உறங்கிய… தமிழக பாஜக பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நெல்லையில் திமுக எம்பி ஞானதிரவியத்தை கைது செய்ய கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேரை கைது செய்தீர்கள்?… சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்வி… 2 பேரை கைது செய்து விசாரணையில் இறங்கிய போலீசார்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் 4 பேர்  பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்… இதில் மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதால் தான் 4 விவசாயிகள் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி விட்டுட்டு போக… அவங்க புத்தியை காமிச்சிட்டாங்க… நகையை திருடிவிட்டு நாடகம்… அம்பலமான சம்பவம்…!!!

மும்பையில் தொழில் அதிபரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டில் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் தொழில் அதிபர் தனது குடும்பத்துடன் மற்றொரு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். மேலும் வீட்டில் ஒரு லாக்கரில் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றுள்ளார். அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை குஜராத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அந்த லாக்கர் சாவியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர தேடுதல் வேட்டை…. வசமாக சிக்கிய 13 பேர்…. கைது செய்த போலீஸ்…..!!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பழைய குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி இந்த மாவட்டத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி போட்ட உத்தரவு… “தமிழ்நாடு முழுவதும்… 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது”… தொடரும் தேடுதல் வேட்டை.!!

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 2,512 ரவுடிகளை, காவல்துறையினர் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.. கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே இரவில்….560 ரவுடிகள் கைது…. அதிரடி காட்டும் காவல்துறை…..!!!!!

தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வருகின்ற சைலேந்திரபாபு, ரவுடிசம் மற்றும் கட்டபஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து இரண்டு கொலைகள் நடந்தது. அதனைப் போலவே திருநெல்வேலியில் சென்றவாரம் போலீசாரின் தம்பி ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். மேலும் தேனி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் சில ரவுடிக் கும்பல்கள் பழிவாங்குவதற்காக தொடர்ந்து கொலைகளை செய்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

போலீசார் அதிரடி… தமிழகத்தில் ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது!!

தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள், கத்திகள் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து கஞ்சா, மாவா பொட்டலங்கள் சிக்கின. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க போலீசார் இந்த அதிரடி ரெய்டு நடத்தினர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேட்புமனு நிராகரிப்பு: எதிர்த்து போராட்டம்…. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கைது…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை நடைபெற்றது. அதில் இரண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரண்டு அர்த்ததில் பேசி….மாணவிக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ….!!!!

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வகுப்பு மாணவர்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க்கிறது இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே.. இவரா?…. ஆபாசம், வீடியோ…. தமிழ் டிக்டாக் பிரபலம் கைது….!!!

தஞ்சை மாவட்டம் மருங்குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா (27) டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமானவர். அந்தச் செயலி முடக்கப்பட்ட காரணத்தால் யூடியூப் சேனல் மூலமாக தனது வீடியோக்களை தினந்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தேனி அருகே நாகலாபுரத்தில் சேர்ந்த சுகந்தி என்பவர், திவ்யா தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் மீது சைபர் கிரைம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்…. 10 பவுன் நகை திருட்டு…. பக்கத்து வீட்டார் கைவரிசை…!!!

வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் அய்யன  கவுண்டம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் காசி வயது( 32). இவர் கிரஷர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய காசியின் குடும்பத்தினர்,  தனது வீட்டின்  பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காசியின்குடும்பத்தினர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த விசாரனயில் காசியின் வீட்டின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூரங்குடி காவல்துறையினர் கடந்த 28-ம் தேதி வேம்பார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இததேபோன்று கடந்த மாதம் 10-ம் தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் […]

Categories
உலக செய்திகள்

உணவுப் பொருட்களில் செலுத்தப்பட்ட மர்ம பொருள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்த உணவுப் பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை செலுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Waitrose, Tesco, sainbury போன்ற சூப்பர் மார்க்கெட்டிலிருக்கும் உணவு பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை நபரொருவர் செலுத்தியுள்ளார். மேலும் இவர் மேற்கு லண்டனுக்கு சென்று அங்கிருக்கும் பொதுமக்களை மிகவும் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளை பேசிய நபரை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது…. ஜெ.பி.நட்டா கண்டனம் ….!!!!

மத்திய அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரையின்போது கொரோனா மீறியதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே, “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்.” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு…. ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது….!!!!

மத்திய அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரையின்போது கொரோனா மீறியதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே, “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்.” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக பூஜை செய்தால்… பணம் மழை கொட்டும்… பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்…!!!

நாசிக் மாவட்டத்தில் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை ஏமாற்றிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது […]

Categories
சினிமா

’மீரா மிதுன் கைது பெருமைக்குரியது’…. மீரா மிதுனை வம்புக்கிழுத்த சனம் ஷெட்டி…..!!!

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை கைது செய்த,சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று  சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், மீராவை கைது செய்தது குறித்து அவருடன் பிக் பாஸில் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று. சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனைத் தொடர்ந்து…. அவரது ஆண் நண்பரும் கைது…. பொலிஸார் அதிரடி….!!!

மீரா மிதுனைத் தொடர்ந்து அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். அதன் பிறகு தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அவர் மீது போலீஸில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸார் அதிரடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும்…. ரசிகர்களின் வைரல் பதிவு…!!!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடல் நடிகை மீரா மிதுன் அதிரடி கைது…. கத்திக் கூச்சலிட்டு அவரே வெளியிட்ட வீடியோ….!!!

போலீசார் கைது செய்ய வந்த போது நடிகை மீரா மிதுன் கத்தி கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பலரையும் கொச்சையாக பேசி வந்த மீரா மிதுன் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இணைந்து பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பலர் மீராமிதுன் […]

Categories
சினிமா

Exclusive: குத்திட்டு செத்துருவேன், முதல்வரே பிரதமரே…. நடிகை பரபரப்பு வீடியோ….!!!!

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை […]

Categories
சினிமா

“ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கனுமா”…. நடிகை மீராமிதுனின் கதறல் வீடியோ…. வைரல்…..!!!!

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை […]

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கைது…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை […]

Categories
சினிமா

என்னை கைது செய்ய முடியாது…. மீரா மிதுன் போலீசுக்கு சவால்….!!!!

நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார். அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிக்கினால் அடுத்த நிமிடமே…. ஷில்பா ஷெட்டி கைது… போலீசார் அறிவிப்பு…!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா விரைவில் கைதாவாரா….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

நடிகை யாஷிகா விரைவில் கைதாவார் என்று தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா. இதனை அடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய பெண் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை  அருகே சாராயம் விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி , சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சுமதி என்பவர் சாராயம் விற்பனை செய்து  வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சுமதியை கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார்  பறிமுதல் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை வன்கொடுமை செய்து மனைவியாக்கிய நபர்.. குகைக்குள் அழைத்து சென்று கொன்ற கொடூரம்..!!

டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதத்தில் ரூ.1.17 கோடி… சம்பாதித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்… போலீசார் தகவல்…!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கல்…. பாஜக பிரமுகர் கைது…!!!!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி பகுதியில் நள்ளிரவில், தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கோபால் என்பவரது விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தம்மம்பட்டி நடுவீதி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ், 45; இவர் பெங்களூருவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

நடிகையின் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டவர் கைது… வெளியான தகவல்…!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை பிரதியூஷா பாலின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த திரைப்படம் மற்றும் டிவி சீரியல் நடிகை பிரத்யுஷா பால் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாக கடந்த ஓராண்டுக்கு முன் மிரட்டல் விடுத்தார். கடந்த ஓராண்டு காலமாக சமூகவலைதளத்தில் கற்பழிப்பு மிரட்டல் விட்டு வந்த அந்த நபர், சமீபகாலமாக மார்பிங் செய்த புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஆமையை வரதட்சணையாக கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு…. பரபரப்பு….!!!!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் , ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணைகேட்டு தகராறு செய்தனர். அந்த குடும்பம் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை மற்றும் ஒரு கருப்பு லாப்ரடோர் நாய் ஆகியவற்றை வரதட்சணையாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை கூறிய வாலிபர்…. ஏமாந்துபோன மாணவிகள்…. போக்சோவில் தூக்கிய காவல்துறையினர்….!!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி தனது தந்தையுடன் வசித்து வருகின்றார். இவரது தந்தை சற்று மனநலம் குறைந்தவர் என்று கூறப்படுகின்றது. எனவே மாணவியின் தாயார் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் மாணவியுடன், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த அபி என்ற வாலிபர் பழகி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உன்னை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரோலில் சென்ற கைதி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. வேலூரில் சோகம்….!!

பரோலில் சென்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியகுளத்தில் வேலு என்ற வேல்முருகன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2012-ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின் 2017-ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வேல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்கள சும்மா விடக்கூடாது…. வசமா சிக்கிய 15 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹோமாவதி ஆகியோர் திருப்பத்தூர் டவுன் பகுதியில் இருந்த 15 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Categories
சினிமா

BREAKING: ஆபாச படங்கள்: மிக பிரபல நடிகையின் கணவர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது… நாசவேலையில் ஈடுபட திட்டமா…? போலீஸ் விசாரணை…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் வெடிபொருட்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் பர்னகாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாசன் பகுதியில் போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், 10 கிலோ எடை உள்ள வெடிபொருட்கள், 20 தோட்டாக்கள், 40 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அவர் நாசவேலைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” வசமா சிக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கருவாட்டுபேட்டை பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு உள்ள மதுபான கடையின் அருகில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்களம் கம்மா பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாட்சியாபுரம் பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுக்கு நீதான் காரணமா…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கூற் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கோபி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை… விரட்டி சென்று கைது செய்த போலீஸ்… எதுக்கு தெரியுமா…?

புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். கோவையை சேர்ந்த மருத்துவருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 2.85 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த மருத்துவர் காவல்துறையில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்த காவல்துறையினர், அவர் சென்னையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனியாக அழைத்த சிறுவன்…. சிறுமிக்கு நடந்த தொந்தரவு…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் அருகில் ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி […]

Categories
தேசிய செய்திகள்

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… மனைவியை அடித்துத் துன்புறுத்திய நடிகர் கைது…!!!

வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4வது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார். ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை வசியம் செய்வது எப்படி”…? யூடியூபில் வீடியோ பார்த்து… பெண்ணின் வீட்டின் முன் நள்ளிரவில் பூஜை செய்த இளைஞன்….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்பதற்காக பூஜை பொருட்களை எடுத்து அந்த பெண்ணின் வீட்டின் முன் இரவில் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவே அடுத்த குண்டல பள்ளி என்ற பகுதியை சேர்ந்த முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் இரவில் சில பெண்களுக்கு தொடர்பு கொள்வதும் எதிர்முனையில் பேசும் பெண்கள் குரல் நன்றாக இருந்தால் அவரை புகழ்வதால் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வழிபறியில் ஈடுபட்ட 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் குல்ஜார் 2-வது வீதியில் யூனூஸ் நபில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பங்களாமேடு பகுதியில் கையுறைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் யூனுஸ் நபில் தனது குடோனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளிசேரி கிராமத்தில் வசித்து வரும் குடியாத்தம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வேதாச்சலம் என்பவர், தனது […]

Categories
தேசிய செய்திகள்

5-ம் வகுப்பு போலி சான்றிதழ்…. பாஜக எம்.எல்.ஏவுக்கு சிறை….!!!

தனது மனைவியின் ஐந்தாம் வகுப்பு சான்றிதழில் மோசடி செய்ததாக ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தன் மனைவியை போட்டியிட வைப்பதற்காக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை போல போலி சான்றிதழை அவர் தயாரித்துள்ளார். அதன் பிறகு இந்த உண்மை வெளியே தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |