மதுரையை சேர்ந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சத்தீஸ்கரில் ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் […]
