அசாம் மாநிலத்தில் உள்ள நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட நபர் திடீரென உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். […]
