கைக்குழந்தையுடன் டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏனாதி கரம்பை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆவனம் கைகாட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் கைக்குழந்தையுடன் மது வாங்க சென்ற சங்கரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படை வீரரான ராஜகோபால் என்பவர் சங்கரிடம் கைக்குழந்தையுடன் […]
