தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் மாணவி இடையே வந்த தகராறில் தம்பிதுரை மனைவியை பிரித்து சென்றுள்ளார். […]
