அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமீலியா பிரவுன் என்ற பெண் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சில தினங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் ஊறல் ஏற்பட்டதோடு அந்த இடம் சற்று வீங்கிய நிலையில் சிவந்து காணப்பட்டுள்ளது. எனவே அவர் இரண்டாவதாக தடுப்பூசி செலுத்துவதை எண்ணி கவலையடைந்துள்ளார். […]
