நான் பெரும் புகழோடும் வசதியுடனும் வாழ்வதற்கு காரணம் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஐயா தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 90-வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது :- “எனது குருவான கே.பி பாலசந்தருக்கு இன்று 90-வது பிறந்தநாள். கே.பாலசந்தர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாகியிருப்பேன். ஆனால் கன்னட மொழியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். இன்று […]
