பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது […]
