இந்திய கார்ட்டூன் வரைவாளரான கே. சங்கர பிள்ளை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கடந்த 1902-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் சங்கர பிள்ளை பிறந்தார். இவர் ஒரு சிறந்த கேலிச்சித்திர வரைவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் அரசியல் தொடர்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சங்கர் வீக்லி என்ற ஆங்கில இதழை நடத்தினார். இதனையடுத்து சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் மற்றும் சங்கர்ஸ் வீக்லி […]
