கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி, சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார். முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா, இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே […]
