சமையல் செய்துகொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. ஓட்டுனரான இவருடைய மனைவி செல்வி சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ சிலிண்டர் வரை வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். […]
