நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோரின் தலைமையில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கொரோனா காலத்திலும் கேஸ் வினியோகம் செய்து வருவதால் […]
