Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு நடைமுறை ஒத்திவைக்கும் அபாயம்… தமிழ் மொழி தான் காரணம்… ஐகோர்ட் மதுரை கிளை விளக்கம்…!!!

தமிழகத்தில் தமிழ் மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தமிழ் வழியில் பயின்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதும் அனைவருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதனை பலர் முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’ … முதல்வர் என்ன செய்கிறார்?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீன துருப்பு எப்போது வெளியேற்றப்படும்?… தயவு செய்து சொல்லுங்கள்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று மாலை ஆறு மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிரப் போகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினர் சிறுமி தற்கொலை… காங்கிரஸ் தலைவர்கள் ஏன் பாஸ்தருக்கு செல்லவில்லை?… பா.ஜனதா எம்.பி. கேள்வி…!!!

உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மாண்டவி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணை செய்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் சடலத்தை எரித்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கல்வியை காவிமயமாக்க… துணைவேந்தர் சூரப்பாவுக்கு… அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?… ஸ்டாலின் கேள்வி…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிதி தேவை இல்லை என்று கூறுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி உதவி தேவை இல்லை என்று கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வராக?.ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு […]

Categories
அரசியல்

நான் சோபா போட்டது தப்பு… ஆனா மோடியின்… சொகுசு விமானம்… தப்பில்லையா?… சொல்லுங்க… ராகுல் காந்தி கேள்வி…!!!

நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சனம் செய்துள்ள நீங்கள், பிரதமர் வாங்கியுள்ள சொகுசு விமானத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்து சென்றுள்ளார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம் ரத்து… சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?… சொல்லுங்கள்… கமல்ஹாசன் அதிரடி…!!!

கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறுங்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்தக் கூட்டத்தில் ஒரு கிராமத்திற்கே எது தேவை மற்றும் எது தேவையற்றவை என்பதை அவர்களே முடிவு செய்து தீர்மானம் செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா… கிராம சபை மூலம் வந்துவிடுமா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால் மட்டுமே நாடு செழிப்பாக இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், “கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால்தான் நாடு செழிப்பாக இருக்க இயலும்.கிராம பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கின்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

மற்றொரு நமஸ்தே டிரம்ப் நடத்துவாரா மோடி?… ப.சிதம்பரம் அதிரடி பேச்சு…!!!

இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு என்று கூறிய அமெரிக்க அதிபர் தற்போது இந்தியாவை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடந்த பிரச்சாரத்தின் போது இந்தியாவை நட்பு நாடு என்று கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனைப்போலவே சீனா மற்றும் ரஷ்யா ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் விவசாயிகளை அவமதிக்கிறீர்களா?… எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் அனைவரும் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தில் மிகப்பெரிய ஆறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்… திமுக தலைவர் கேள்வி… திணறும் தமிழகம்…!!!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும். மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி… கூடுதல் தகவல்கள் தேவை… உலக சுகாதார நிறுவனம் தகவல்…!!!

ரஷ்யா உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் புதின் கூறும்போது, ” உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா பதிவு செய்திருக்கிறது” என்று கூறி உலகையே அதிர வைத்துள்ளார். இருந்தாலும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் குடியுரிமை… பிரச்சனையை கிளப்பியுள்ள டிரம்ப்…!!!

அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப்  பிரச்சனை எழுப்பியுள்ளார்.   அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்க இருப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணை முகமை… செயல்பாட்டில் உள்ளதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை செயல்பாட்டில் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு எனது மகள் நளினியும் மற்றும் மருமகன் முருகனும் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருந்து கொண்டிருக்கின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்துள்ள நிலையில், சென்றவாரம் முருகனின் […]

Categories
அரசியல்

இது இந்தியாவா? இல்லை ‘இந்தி’-யாவா?… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கனிமொழியிடம் இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா? என பாதுகாப்புப்படை அதிகாரி கேட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி கனிமொழி விமான நிலையத்திற்கு சென்றிருந்த சமயத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி, ‘உங்களுக்கு இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டிருக்கிறார்.அந்த சம்பவத்தை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.ஐ.எஸ்.எஃப் உறுதி […]

Categories
பல்சுவை

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா?… கனிமொழியின் விமான நிலைய அனுபவம்…!!!

  ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]

Categories
உலக செய்திகள்

ஸ்டைலாக, கெத்தாக…. கால்மேல கால் போட்டு…. அதிபரை தெறிக்க விட்ட செய்தியாளர்….!!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ட்ரம்ப் திணறிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் உயிரிழப்புகளின் விகிதம் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அதிபர் ட்ரம்ப் இறப்பு விகிதத்தை பார்க்காதீர்கள் உலக அளவில் இருக்கும் அதிக பாதிப்பை பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால் செய்தியாளர் உலக அளவில் மற்ற நாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 2வது வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாமா?… பிற்பகலில் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

இன்றைய விசாரணைக்கு அரசு தலைமையில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த அடிப்படையில் 9 லட்ச மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க உள்ளீர்கள் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 35,000 கொரோனா பாதிப்பில் சுமார் 25,000 பேர் சென்னையில் மட்டும் உள்ளனர். எனவே ஜூலை 2வது வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுதேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளிவைக்க கூடாது? .. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!!

 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பொதுத்தேர்வினை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கு விவரம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க குடும்பம் தானே…! ”நியாயமா பேசுங்க” விளாசிய செல்லூர் ராஜீ ..!!

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]

Categories
அரசியல்

மது விற்பனையை எதிர்க்கும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலையை மூடத்தயாரா? : செல்லூர் ராஜு

மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிவுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க – கேள்விகளை அடுக்கிய திருமாவளவன்

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார்  உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு மத்திய அரசு என்ன செய்யும், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? – வைரமுத்து

மத்திய அரசை நோக்கி கவிஞர் வைரமுத்து அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வலுப்பெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வி ஒன்று எழுப்பி பதிவிட்டுள்ளார். அது “எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்.”

Categories

Tech |