கேரளா மாநிலம் கொச்சியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கென காவல்துறை ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். இம்மாநாட்டில் சுமார் 1200 உள் நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அனுமதி இன்றி பறக்கும் ஆளில்லா விமானங்களைப் பிடிக்க கேரள காவல்துறை ஈகிள் ஐ எனும் பெயரில் ட்ரோன் டிடெக்டர் வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலேயே மாநில காவல் துறை ஆளில்லா விமானத்தை கைப்பற்றும் […]
