Categories
தேசிய செய்திகள்

“பிறந்த இரண்டே நாளில்” குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கேரளா பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளம் குழந்தையின் பிணம் கிடந்துள்ளதை பார்த்த ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகி இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிச் சென்றது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் புழக்கல் பகுதியை சேர்ந்த மேகா என்ற […]

Categories
தேசிய செய்திகள்

டீக்கடையில் குண்டுவெடிப்பு…. காவல்துறை விசாரணை…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனுபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவருக்கு சொந்தமான கடையில் வழக்கம்போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள் பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது திடீரென கடையில் குண்டு வெடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுமியை துன்புறுத்திய பெண் போலீஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தன்னுடைய செல்போனை திருடியதாக கூறி 8 வயது சிறுமி மற்றும் அவரது தந்தையை பெண் போலீஸ் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுமிக்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம், ஆடின்க்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன்னுடைய 8 வயது மகளுடன் கடந்த 27-ஆம் தேதி ஆடின்க்ல் பகுதியில் உள்ள மூனுமுக்கு சாலைக்கு சென்றுள்ளார். அங்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உதிரிபாகங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் மாநில அரசின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சுற்றுப்பயணம் கிளம்பிய சமந்தா……. எங்கன்னு நீங்களே பாருங்க…….!!!

சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் வெளியான ”புஷ்பா” படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சந்தோஷத்துடன் சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி பம்பையிலிருந்து நீலிமலை, […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. “பாஜக தலைவர் வெட்டிக்கொலை”….. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. 144 தடை உத்தரவு..!!

காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த பாஜக தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் ஆலப்புழாவில் அதிகாலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.. காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை பலமுறை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்கப்பட்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.. எனினும் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கே!…. வாகனங்களை சார்ஜ் செய்ய இனி…. அரசு செம மாஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறுகாணாத அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சி பெற்று வருகிறது. இதைத் தவிர மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இருந்தாலும்கூட, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பாகுபாடும் இல்லை…. இனி இருபாலருக்கும் ஒரே சீருடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை போக்குவதற்காக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இரு பாலின மாணவர்களுக்கும், ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பங்காக பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது. மேலும் கேரளாவில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. 55,000 வாத்துக்களை கொல்ல அரசு திடீர் முடிவு…..பெரும் பரபரப்பு ….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்து பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள வாத்துப்பண்ணை ஒன்றில் 13,000-க்கும் அதிகமான வாழ்த்துக்கள் சமீபத்தில் பறவை காய்ச்சலால் இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர், ஆலப்புழாவில் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் உயர்ந்து கொண்டே வருவதால், பண்ணைகளில் உள்ள 20,000 வாழ்த்துக்களையும் 35,000 கோழிகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. இது அல்லவா அதிசயம்….. “இரட்டை சகோதரிகள்”…. ஒரே நாளில் எல்லாமே….!!!

இரட்டை சகோதரிகள் 2 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்று ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலயோல பரம்பு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர்-அம்பிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இதனால் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வளர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“நல்ல ஐடியாவா இருக்கே”…. இனி ஆண்களும் வீட்டு வேலை செய்வார்களா?…. கேரள அரசு புதிய அதிரடி….!!!!

சமையலில் இருந்து பெருக்குதல் வரை அனைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாக கேரள அரசு திட்டமிட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், பெருக்குதல் என அனைத்து வீட்டு வேலைகளையும் மக்கள் தினசரி செய்வது வழக்கம். இந்த பணிகளை ஆண்களை விட பெண்களே அதிகம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள அரசானது இந்த பணிகளை ஆண்களும் செய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலமாக பாலின […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவுக்குள் நுழைந்தது ஓமைக்ரான்…. இந்தியாவில் 38 ஆக உயர்வு!!

பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஓமைக்ரான் வகை தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் கேரளாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.. பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறிப்பட்டுள்ள நிலையில், அவர் எர்ணாகுளம் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் தலா ஒருவருக்கு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: கேரளாவிலும் பரவிய ஓமைக்ரான்…. ஒருவருக்கு பாதிப்பு உறுதி…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய அந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”…. இன்று முதல் அனுமதி…. கிரீன் சிக்னல் காட்டிய கேரள அரசு….!!!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் புனித நீராட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் யாத்திரை சீசன் நவம்பர் மாதம்  16-ம் தேதியிலிருந்து தொடங்கியது. இதனிடையில் 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறிய இடைவெளி இருக்கும்.  ஆனால் சீசன் தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

இன்றும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…..!!!!

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் இன்று நாளை என இரண்டு நாட்களுக்கு இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் மதியம் 2 மணி தொடங்கி 10 மணி வரை மின்னல் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது. அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்…. அரசு பரபரப்பு உத்தரவு….!!!!

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் நேற்றைய நிலவரப்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை தடுப்பூசியை போடவில்லை என்று தெரியவருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி கூறியது, அரசு பள்ளிகளில் 2,00,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

உலக திருநங்கை பட்டத்தை தட்டி சென்றார்…. கேரளாவின் ஸ்ருதி….!!!!

கேரளாவை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா என்ற 25 வயதான பெண் உலக அளவில் நடந்த திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று மிஸ் டிஸ்டன்ஸ் கிலோபல் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.  இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

11 முறை கத்தியால் குத்தி… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொடூர கொலை… கேரளாவில் பரபரப்பு….!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவள்ளா தாலுகா பிரியங்கா பகுதியின் சந்தீப்(34) என்பவர் வசித்துவருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்தனர் கும்பல் திடீரென மறித்தனர். அதன் பிறகு அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தீபை 11 முறை கொடூரமாக குத்தினர். இவர் அலறல் சத்தம் […]

Categories
உலக செய்திகள்

“மேலிருந்து வந்த தோட்டாக்கள்!”… இந்திய மாணவி பலி… அமெரிக்காவில் துயர சம்பவம்…!!

அமெரிக்காவில், குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டதால் கேரளாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அலபாமா என்னும் மாகாணத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவியான மரியம் சூசன் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரின்  குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மஸ்கட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார்கள். இந்நிலையில், சூசன் குடியிருப்பில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மேல் மாடியில் வசித்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டாக்கள் சூசன் மீது […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. கடலுக்கு செல்ல தடை…. அலர்ட்… அலர்ட்….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….!!!!

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாக்கு வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் […]

Categories
தேசிய செய்திகள்

“எத்தனை முறை கூறினாலும் திருந்தவில்லை “…. கேரளா உயர் நீதிமன்றம் வேதனை….!!

கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள தென்மலை உருகுன்னு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்கச் சென்றபோது என் புகாரை விசாரணை செய்யாமல் இன்ஸ்பெக்டர் விஷ்வம்பரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர்கள் என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் – பீதியில் பொதுமக்கள் …!!

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில், ஜிகா வைரஸ் நோயும் பரவியது. இந்த நோயால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்திற்கு பின், அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் கேரளா மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா 3,000 […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கனமழை…. இன்று முதல் 25ஆம் தேதி வரை…. 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
உலக செய்திகள்

“போதை பொருள் விருந்தில் பங்கேற்பு!”.. விபத்தில் பலியான மாடல் அழகிகள் குறித்து வெளியான தகவல்..!!

இந்தியாவில் வாகன விபத்தில் பலியான கேரள அழகி மற்றும் அவரின் தோழி தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர் என்ற 26 வயது இளம்பெண், கடந்த 2019 ஆம் வருடத்தில், மிஸ் கேரளா பட்டம் பெற்றார். அதே அழகிப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த, அஞ்சனா சாஜன், அன்சி கபீருக்கு நெருங்கிய தோழியானர். அதன் பின்பு, இவர்கள் இருவரும் திருச்சூரை இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து வாகனத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு நோ சொன்ன காதலன்…. காதலி செய்த செயல்…. கேரளாவில் பரபரப்பு….!!

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலி பகுதியில் ஷீபா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் திருவனந்தபுரத்தில் புஜப்புரா பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அருண்குமாரை வற்புறுத்தி உள்ளார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்று அருண் குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சுற்றுலா பயண டீக்கடைக்காரர்…. கேரளாவில் மரணம்….!!

கேரளா மாநிலம் கொச்சியில் கே.ஆர். விஜயன்(71) என்பவர் வசித்துவருகிறார். அவரது மனைவி மோகனா. இவர்கள் இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மோகனா தனது கணவனிடம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தில் தினமும் 300 ரூபாய் சேமித்து வைப்பது வழக்கமாகும். இந்த சேமிப்புமூலம் 2007ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகன சார்ஜிங் செய்ய…. கட்டணம் இவ்வளவு தான்…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி என நினைத்து…. கணவர் செய்த கொடூரச்செயல்…. முகக்கவசத்தால் வந்த வினை…!!!!

கேரளாவைச் சேர்ந்தவர் பிஜு. இவருடைய முதல் மனைவி கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார். எனவே அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா என்பவர் அமர்ந்து வேலை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் மழை வெள்ளத்திற்கு தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு,காசர்கோடு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் மழை வெள்ளத்திற்கு தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு,காசர்கோடு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காவிரி – வைகை – குண்டாறு வழக்கு… 6 வாரங்களுக்குள் பதில்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் இருந்த கர்நாடக அரசு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தது.  உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. புதிய அறிவிப்பு….!!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மத்திய பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை – வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள் ..!!

தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் டோஸ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஸ்ரீகாந்த்  மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மன் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சந்திரா லக்ஷ்மன் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு சிறப்பு ரயில்…. எந்த வழியாக போகுது தெரியுமா?…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கொரோனா கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறை பொதுமக்களின் நலனுக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் ரயில்களில்  பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பீகார் மாநிலம் கான்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம் வழியாக் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணூர் விரைவு ரயில் தடம் புரண்டது….. ரயில்வே காவல்துறை விசாரணை…..!!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி வழியாக கர்நாடக மாநில வரை கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் மாலை 6 மணி கண்ணூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு சென்றடையும். இந்நிலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முத்தம்பட்டி வனப்பகுதியில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்த உள்ளது. இந்த கற்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் கேரளா மக்கள்….!!

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் சட்டசபைக்கு சைக்கிளை செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து காலையில் நண்பருடன் சைக்கிளை வாங்கி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் சைக்கிளில் […]

Categories
மாநில செய்திகள்

மண்டல பூஜையை முன்னிட்டு…. கோவில் நடை திறக்க அனுமதி…. சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு….!!

ஐயப்பன் திருக்கோவிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கிற்காக கோயில் நடை திறக்கப்படவுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதிலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இந்த ஆண்டுகொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக  25,000 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்கணும்…! அறிக்கை கொடுத்து இருக்கணும்…. எதுமே பேசல ஏன் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். 145 அடியாக இருந்த போது அணையை  திறக்கவில்லையே. அப்ப அசாதாரண சூழ்நிலை இல்லை, இப்பதான் அசாதாரண சூழ்நிலை. இன்றைக்கு 139 அடி கூட வரல,  138 அடியிலே திறக்குறாங்க. நமக்கு 2,500 கன அடி வருது. அங்க  3300 கனஅடி போயிட்டு இருக்கு. இப்போ கூட நீர்மட்டம் 139 அடியை எட்டவில்லை. இப்படி இருக்கும்போது  அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்…. ஊடகங்களை கண்டு ஒழிய மாட்டேன்…. ஸ்வப்னா அதிரடி….!!!!

தங்க கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேனென்று ஜாமினில் வெளிவந்த ஸ்வப்னா கூறியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தூதராக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரமானது அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கில்லி ரீ ரிலீஸ்…! கலக்கும் தளபதி…. களைகட்டும் திரையரங்கம்….!!

நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் அடித்த கில்லி படம் கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். வசூல் சாதனை செய்த கில்லி விஜய் ரசிகர்களாக அல்லாதவர்களுக்கு கூட பிடித்திருந்தது. தெலுங்கில் ஒக்கடு ரீமேக்கான கில்லியை விறுவிறு இயக்கத்தால் சூப்பர் ஹிட் ஆக்கினார் இயக்குனர் தரணி. இப்போதும் பலருக்கு ஃபேவரட் படமாக கில்லியை சொல்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
அரசியல்

கேரள அரசே நீதி வழங்குங்கள்… மாணவிக்காக குரல் கொடுத்த திருமாவளவன்…!!!!

கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக பேசியதால் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு கேரள அரசு நீதி வழங்க வேண்டும் என்று தேசிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பை சேர்ந்த தீபா மோகன் என்கின்ற மாணவி கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படைப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட் அலர்ட்….!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் நடவடிக்கை பாயும்…. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை….!!!

கேரள மாநிலத்தில் கடந்த 9 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படாமல் இருந்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பாக போக்குவரத்துத்துறை மந்திரியுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். முதல்நாள் போராட்டத்தில் நீண்டதூர பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் கேரளா பயணிகள் மட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது […]

Categories

Tech |