Categories
தேசிய செய்திகள்

பிரபல டிவி சேனல் முடக்கம் – மத்திய அரசு அதிரடி …!!

மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியா ஒன் டிவியின் ஒளிபரப்பு சேவை  மத்திய அமைச்சகத்தின் அனுமதி மறுப்பதால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் கேரள பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை, என்பதால் உரிமத்தை புதுப்பிக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

OMG : நொடி பொழுதில்…. அபாய கட்டத்தை நோக்கி சென்ற ரயில்…. கேரளாவில் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அதாவது ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இரவு 10.30 மணி அளவில் அந்த சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டது. இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு ரயில் நிலையங்களிலும் சில ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரயில் சேவைகளில் […]

Categories
உலக செய்திகள்

“அதிசய நிகழ்வு!”….. 6 மாதங்களாக கொரோனாவோடு மல்லுக்கட்டி…. உயிர்பிழைத்த இந்தியர்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய அமைச்சர்…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதிலும் நேற்று 73-வது குடியரசு தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கேரள மாநிலமான காசர்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சரான அகமது தேவர்கோவில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனே தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது. இதனிடையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேசியக்கொடி […]

Categories
தேசிய செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா?…. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் பறவை காய்ச்சலால் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா- தமிழக எல்லைகளில் கால்நடைத் துறை சார்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்ட எல்லையான உடுமலை சோதனைசாவடி பகுதியில் கால்நடை துறை சார்பாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோழி முட்டை, […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. நேருக்கு நேர் மோதிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கரை பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று காரை முந்த முயற்சி செய்துள்ளது. இந்த நிலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பின்னோக்கி சென்ற சரக்கு வாகனம் அங்கு வந்து கொண்டிருந்த இரண்டு […]

Categories
இந்தியா கேரளா மாநிலம் மாநில செய்திகள்

இனி பாஸ்டடா போகலாம்..! மலையை குடைந்து சுரங்கப்பாதை… திறந்து வைத்த கேரள கலெக்டர் ..!!

கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக  பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில்  இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது மாறுபடுகிறது. அதன்படி கேரளாவில் இதுவரை 56 வயது தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் மற்ற சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில அரசு அந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை குழந்தைகள் சாப்பிட்டா அவங்க கதி என்ன?…. நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியில் சூரிய தாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் எரூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் நடிகை சூரிய தாரா தோசை மாவு வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வசமா மாட்டி கொண்ட நைட்டி திருடன்…. பெரம்பலூரில் இருந்து கேரளா போலீசாருக்கு தகவல்…. பின்னணி என்ன ?….!!!

கேரள மாநிலம் தலையோலப்பரம்பு பகுதியில் மேத்யூ, சூசாம்சா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சோனா என்ற மகள் இருக்கின்றார். இவர் திருமணமாகி பெரம்பலூரில் கணவருடன் வசித்து வருகிறார். இதையடுத்து வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றி சோனா கேமராக்களை வைத்துள்ளார். இதன் வழியாகத் தனது பெற்றோரை சோனா கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் நைட்டி அணிந்து ஒரு ஆண் நிற்பதை தனது செல்போன் மூலம் சோனா […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை… வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மாநில அரசு போட்ட சூப்பர் ப்ளான்….!!!!

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு வேலைப்பார்த்து வரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருக்கும் நிலையில், இதனை 57ஆக உயர்த்த அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாநிலத்தில் மட்டும்தான் இவர்களுக்கான ஓய்வு பெறும் வயதானது 56ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 மற்றும் ஒருசில மாநிலங்களில் 60ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு வரும் 22ஆம் தேதி முதல்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக மத்திய அரசானது அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரையிலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…. பேஸ்புக் காதல்…. ஆண் வேடம் அணிந்து வந்த பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா மாநிலமான ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவியுடன், சமூக வலைதளம் மூலம் நபர் ஒருவர் பழகியுள்ளார். இதையடுத்து மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். அதன்பின் ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த நபர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மாணவியை கடத்தி சென்றவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

10 வருடம் நோயாளியாக இருந்த மனைவி…. அவரையும் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாடு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் – லீலாம்மா தம்பதியினர். இவர் ஒரு விவசாயி. இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 5 பேரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் லீலாம்மா உடல்நிலை பாதித்து சுமார் 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். மனைவியை ஜோசப் தான் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தினால் மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் நேற்று வீட்டு சுற்றுப்புற […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கு பேர் தான் அதிஷ்டம்…. காலையில் கூலி தொழிலாளி…. மாலையில் லட்சாதிபதி….!!!!

கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் முதல் பரிசு  ரூ12 கோடி ஆகும். டிக்கெட் விலை  ரூ300. முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதையடுத்து சில வாரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. அதன்பின் மேலும் 9 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. அதுவும் விற்பனையானதை அடுத்து கூடுதலாக 8.34 லட்சம் டிக்கெட்டுகள்  அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் லாட்டரி குலுக்கலானது நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. பாலியல் வன்கொடுமையால் 6 பெண்கள் தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

பாலியல் வன்கொடுமையால் பழங்குடியின பெண்கள் 6 பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலமான திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதுரா மற்றும் பாலோடு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் 192 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போதைப் பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய விரோத செயல்கள் அதிகமாக அரங்கேறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விதுராவில் பழங்குடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆன்லைனில் ஆர்டர் செய்த வாலிபருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியா?….!!!!

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்…. சிறுமி மீது ஆசிட் வீசிய வாலிபர்…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் சனல்- நிஜிதா தம்பதியினர். சனல் கூலி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்களில் 50 […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. நாளை முதல் அனைத்து நீதிமன்றங்களும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும் எனவும் அதிலும் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, உயர் “நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வீடியோ கான்பரன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 3 வாரங்களில் உச்சத்தை எட்டும் கொரோனா…. எச்சரிக்கை விடுத்த அரசு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா முதல், இரண்டாவது பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், இந்த முறை டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள போதும் கட்டுப்பாடுடனே இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க இருந்துடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க”…. திருமணமான கையோடு ஆம்புலன்ஸில் ஊர்வலம்…. நடந்தது என்ன?….!!!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கட்டணம் பகுதியில் புதிதாக திருமணமான ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடைய உரிமத்தை இழக்கும் அளவுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு என கணக்கிட்டு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை, 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை என வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டட விதிகளின்படி போதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. அதிகாலையில் நடந்த பெரும் சோகம்….!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சென்ற ஈரோட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்த மினிபஸ் பத்தினம்திட்டா என்ற இடத்திற்கு அதிகாலையில் வந்த போது, பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாவட்டங்களுக்கு நாளை ஸ்பெஷல் விடுமுறை…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

12 நாட்களில் 500 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சந்தைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், முதியோர்கள் என்று பலரும் நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஒருபுறம், பறவை காய்ச்சல் மறுபுறம் என […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி, மகன் கழுத்தை அறுத்து கொலை…. தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு 45 வயது நபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனி சக்கரியா (45). இவருக்கு ரீனா (வயது 45) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ரியான் (7) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். சோனி சக்கரியா குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

இது என்னடா புதுசா இருக்கு?…. இப்படி கூடவா பணம் சம்பாதிக்கிறாங்க?…. ஆண்கள் செய்த அதிர்ச்சி செயல்….!!!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்துத் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த வாலிபர் தனது மனைவி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சார்/மேடம் என அழைக்க நோ சொன்ன பள்ளி…. இனி இப்படி தான் கூப்பிடனும்…. மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அண்மையில் கேரளாவில் மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை கலையும் வகையில் இரு பாலின மாணவர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது, அந்தவகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களிடத்தில் இரு பாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. மிஸ்டு கால் வழியாக மிஸ் யூஸ்…. ஃபாரினில் வேலை செய்வோரின் மனைவிகளே டார்கெட்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் அப்துல் சலாம்(32), அஷ்ரப்(36) வசித்து வருகிறார்கள். மேலும் வாடா நாப்பள்ளி பகுதியில் ரபீக்(31) என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் மூவரும் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களின் இளம் மனைவிகளின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து நண்பர்களாக பழகி வருகின்றனர். அப்போது தங்களை மருத்துவர்கள், பட்டதாரிகள் என்று அறிமுகம் செய்து, அவர்களது நண்பர்களையும் உறவினர்கள் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்கிறார்கள். இந்த நட்பு படிப்படியாக வளர்ந்த பிறகு பெண்களிடம் கடனாகப் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

உரிய பாதுகாப்பு இல்லை…. அடிக்கடி தாக்குதல் நடத்துறாங்க …. கேரளாவை விட்டு வெளியேறிய பிரபலம்….!!!!

சபரிமலை ஐயப்பா சுவாமி கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெண்ணியச் செயற்பாட்டாளர்களான பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் சபரிமலை சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிந்து அம்மினியின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தும் 7 பேரை வாழவைக்கும் அற்புதமான மனிதர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலமான கிளிகொல்லூரில் வினோத்(54) என்பவர் வசித்து வந்தார். இவர் கொரோனா தொற்று காரணமாக சமையல்காரர் வேலையை இழந்தார். இதையடுத்து சொந்த ஊர் வந்த வினோத் தனது மனைவி சுஜாதா, மகள்கள் கீது மற்றும் நீது ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் டிச 2-ஆம் தேதி  வினோத் தன் மகள் கீதுவுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்தின் பின்புறம் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் தந்தை-மகள் இருவரும பலத்த காயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பைக்கில் சென்ற 3 பள்ளி மாணவர்கள்…. கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக்கில் அதிவேகமாக சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலி. 16 வயதே ஆன பென்ஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற  மாணவர்கள் தலைக்கவசம் கூட அணியாமல் மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் பரிதாபமாக 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையம் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்களின் உடல்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணியை எட்டி உதைத்த போலீசார்…. என்ன காரணமா இருக்கும்?…. வைரல்…!!

கேரளாவில் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் கர்நாடக மாநில மங்களூவுருக்கும் இடையே சேவையளிக்கக் கூடிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மங்களூரில் இருந்து திருவனந்தபுரதிற்கு வந்து கொண்டிருந்தபோது கன்னூரில் இருந்து பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ரயிவே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகில் கீழே உட்கார வைத்த நிலையில் போலீசார் தொடர்ந்து கால்களால் எட்டி உதைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசை படகில் தீ விபத்து…. என்ன காரணமா இருக்கும்?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் படகு இறங்கு தளத்தில் தமிழக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களின் விசை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதால் தங்களது படகுகளில் சாப்பிட தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால்  தீ விபத்து ஏற்பட்டு  பக்கத்தில் இருந்த படகுகளில் பிடித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“தன் மகளோடு சேர்த்து மொத்தம் 5 பெண்கள்”…. ஒரே மேடையில்…. தந்தை என்ன செஞ்சிருக்காருனு பாருங்க….!!!!

இந்தியாவிலுள்ள கேரளாவில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தோடு 2 இந்து பெண்கள் உட்பட 5 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள கேரளாவில் சலீம் ரூபனா என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களது மகளுக்கு சலீம் வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளையாக தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். அதன்படியே சலீமின் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆடம்பரத்தை விரும்பாத சலீம் தன்னுடைய மகளின் திருமணத்தின் போது 2 இந்து பெண்கள் உட்பட 5 […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மனசு யாருக்கு வரும்…. 5 பெண்களுக்கு ஒரே நேரத்தில்…. நெகிழ வைத்த சம்பவம்….!!

கேரளா மாநிலம் தலாயி பகுதியில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ருபீனா. இவர்களுக்கு ரமீசா என்ற மகள் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களது மகள் ரமீசாவின் திருமணத்தோடு சேர்த்து மேலும் 5 பெண்களின் திருமண செலவை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படி மற்றும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சலீம் வரதட்சணை வாங்காத ஒருவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவச் சான்றிதழ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆயுர்வேத பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், இதுவரை அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத முதுகலை பட்டதாரிகளின் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பரிசளிக்கப்பட்டது. தற்போது ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மருத்துவர் சான்றிதழ் ஓட்டுனர் உரிமத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்க எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு நிகரான தகுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐய்யப்ப கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

தீப்பற்றி எரிந்த வீடு… சகோதரி தப்பியோட்டம்… பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள வடக்குப் பகுதியில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ஜிஜி. இவர்களுக்கு விஷ்மயா(25) மற்றும் ஜிது (22)ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்றதால்  சகோதரிகள் இருவரும் தனியாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

தாயை காக்க…. காம கொடூரனை போட்டுத்தள்ளிய சிறுமிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தநிலையில் ஒரு பயங்கரமான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவில் தாயை பலாத்காரம் செய்ய முயன்றவரை சிறுமிகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி கிராமத்தை சேர்ந்த முகமது. வீட்டு வேலைக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

தாயை கற்பழிக்க முயன்ற நபர்… சிறுமிகள் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆயிரம் கொல்லி என்ற பகுதியில் முகம்மது என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல் மனைவியை கவனித்து கொள்ள நிலம்பூர் என்ற இடத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்தார். இந்தப் பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் தன் தாயுடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு…. அதிகாலை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது. மேலும் சபரிமலையில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

72 வயசு ஒன்னு பெருசு இல்லை…. அந்தரத்தில் சாகசம் புரிந்த பாட்டி…. வைரல்…..!!!!

கேரளாவில் தனது முதிர்ந்த வயதிலும் குழந்தைதையப் போன்று ஜிப்-லைனில் சென்ற வயதான பெண்மணி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோப் கயிறுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைத்தான் ஜிப் லைன் என்று கூறப்படுகிறது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதியுள்ளது. அந்த ஜிப் லைனில் 72 வயதுடைய பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார். அதாவது சேலை […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. ஜனவரி 2 வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: புத்தாண்டுக்கு கட்டுப்பாடு…. மதுக்கடை 50% மட்டுமே…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும், இரவு நேர ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான்: டிச-30 முதல் இரவு ஊரடங்கு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதல் திருமணம்…. உதவி செய்த உறவினர்…. பெற்றோர்கள் செய்த கொடூர செயல்….!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ள பாலரோமூட்டில் அனிருதன்(63) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி அஜிதா. இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஜெனட் அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு ஜெனடின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் ஜெனட் அதைக் கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெனட் காதலனுடன் பெற்றோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவிலில் நாளை மண்டல பூஜை…. குவியும் பக்தர்கள் …. தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16-ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், […]

Categories

Tech |