Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்….. மாநில அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. முதல் அலையில் கேரளா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட.து இதனால் அங்கு தொடர்ந்து பாதிப்பு குறைந்தது. அதன் பிறகு இரண்டாவது அலையில் கேரளா பெருமளவு பாதிக்கப்பட்டது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கூடுதலாக இருந்தது. இதனால் கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பல்வேறு மாநிலங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல மலையாள நடிகர் காலமானார்….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல மலையாள நடிகரான கைனகரி தங்கராஜ் காலமானார். கேரள மாநிலம், கொல்லம் அருகே கேரளத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.  பிரேம்நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 35 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் தமிழில் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் சார்ந்த அமைப்புக்கு பயிற்சி…. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள்…. பினராயி விஜயன் அதிரடி….!!!

கேரளாவில் மதம் சமந்தப்பட்ட அமைப்பிற்கு கற்று கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்  செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் இந்தியா அமைப்பு சார்பில் புதிதாக பாப்புலர் பிராண்ட் ஆப் எனப்படும் மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எர்ணாகுளத்தில் அடுத்த ஆலுவாவில் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பில் ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பதற்கான கேரளா தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்…. திடீரென பற்றி எறிந்த பேருந்து…. பின்னர் நடந்த சோகம்…!!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து 37 மாணவர்கள் கோவாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்தில், சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் உடன் இருந்துள்ளனர்.  இதையடுத்து இவர்கள் கோவா சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று மாலை கண்ணூர் நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பிறகு கோவா பனாஜி என்ற பகுதிக்கு பேருந்து வந்தபோது திடீரென பேருந்தின் பின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை கவனித்த மாணவர்கள் உடனே பேருந்தை நிறுத்தி என்னவென்று பார்ப்பதற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….விபத்தில் கொடுத்த முத்தம்… ஒரு வருட சிறை தண்டனை….!!!!

கோவாவில் ரயிலில் சென்ற 37 வயதுடைய நபர் தனக்கு பின்னால் நின்ற நபர் மீது மோதியதால் எதிரே நின்ற பெண் பயணியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து இருந்தார். 2015 இல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பெண் அளித்த  புகாரின்படி வழக்கு நடைபெற்று வந்தது. தவறுதலாக நடந்ததால் தன்னை முறையாக நபர் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஒரு வருடம் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… கல்லூரி விழாவில் மாணவ மாணவிகளுடன்… ஐஏஎஸ் அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!!!

தனியார் கல்லூரி விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிய ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிகாரி திவ்யா எஸ் நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில்  மாணவ மாணவியருடன் நடனத்தை கண்டு ரசித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திருவனந்தபுரத்தில் இருந்து…. சலாம் ஏர் சேவை…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஓமன் நாட்டின் மலிவான விமான நிறுவனமான சலாம் ஏர் இன்று (ஏப்ரல்.2) முதல் திருவனந்தபுரத்திலிருந்து விமான சேவையை தொடங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு மஸ்கட்டில் புறப்படும் விமானம் சனிக்கிழமை அதிகாலை 3:50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதையடுத்து திரும்பும் விமானம் மாலை 4:35 மணிக்கு புறப்பட்டு 6:50 மணிக்கு மஸ்கட் சென்றடையும். கோடைக்கால அட்டவணையில் திருவனந்தபுரத்திலிருந்து சேவைகளை தொடங்கும் முதல் விமான நிறுவனம் சலாம் ஏர் ஆகும். திருவனந்தபுரத்திலிருந்து பாங்காக் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது…. பழங்களிலிருந்து மதுவா…. அரசின் அதிரடி அனுமதி…..!!!!

குடி குடியைக் கெடுக்கும் என்ற பழமொழியெல்லாம் நமக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று வரை இந்தக் குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். அதில் முதியவர்கள், இளம் தலைமுறையினர் என எந்தப் பாகுபாடும் இல்லை. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்குமாறு கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கேரளாவில் மதுவின் தேவையானது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த  வகையில் பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க கோரிக்கை ஒன்று […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. அமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியில்…. இந்திய வம்சாவளி…!!!

அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் FedEx என்ற நிறுவனம் கொரியர் வர்த்தகத்தில் உலகளவில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 50 வருடங்களை தாண்டி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தினுடைய நிறுவனர் ஃபிரெக்ட்ரிக் ஸ்மித் ஜூன் இம்மாதம் முதல் தேதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சுமார் 5, 70,000 பணியாளர்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பூர்விகம், […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு விடுமுறை…. தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

அரசு ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா  பரவல் காரணமாக கடந்த 2வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு சார்பில் 2 நாட்கள் போராட்டம் நடைபெறுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிட வந்த இடத்தில் தகராறு…. துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்…. ஒருவர் உயிரிழப்பு….!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியில் உணவகம் ஒன்றை பெண்கள் சிலர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் இந்த உணவகத்திற்கு சாப்பிட  வந்துள்ளது. அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது உணவகம் நடத்திய பெண்களுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினர். அந்த குண்டு கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த சனல்பாபு மீது பாய்ந்தது. இதனால் பேருந்து ஓட்டுநரான சனல்பாபு […]

Categories
தேசிய செய்திகள்

குடித்துவிட்டு தகராறு…. அண்ணனை உயிருடன் புதைத்த தம்பி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பலமுறை கண்டித்தும் அதை கேட்காத பாபு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபுவின் தம்பி சாபு எவ்வளவு சொல்லியும் திருந்தாத அண்ணனை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்நிலையில் அவர் குடித்து வந்ததை கண்ட சாபு அண்ணனின் கழுத்தை நெரித்து அருகே உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை…. வெளியான பகீர் சம்பவம்…!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியில் உள்ள மனக்கொடியில் வசித்து வருபவர் சிவசங்கரன் மகன் தீரஜ் (37). இவருக்கும் திருச்சூர் மாவட்டம் மாரோட்டியில் வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை 10 மணி அளவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் சில கைகலப்புகள் நடந்துள்ளது. இதனால் திரஜ் மனவருத்தத்தில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேர்வா பகுதியில் உள்ள காயலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வலையில் திரஜின் இறந்த உடல் […]

Categories
தேசிய செய்திகள்

‘இனி இது வேண்டாம்’… குருவாயூர் பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

குருவாயூர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து நேற்று புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் விகே விஜயன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் விஜயன்  பேசும்போது, கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகரின் தம்பி திடீர் கைது… காரணம் என்ன…?

கேரளத் திரை உலகில் பிரபலமான  நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில்கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியிருக்கிறார். அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

பதவி உயர்வை பாதிக்கும் செயல்கள்…. பொதுமக்களிடம் இப்படி தான் நடக்கணும்…. கேரள அரசு அதிரடி….!!

அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் தன்மையாக நடந்து கொள்ளாவிட்டால் பதவி உயர்வு கிடைக்காது என்று கேரள அரசு அறிவித்துள்ளது கேரளாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக பல சீர்திருத்த முயற்சிகளை  அரசு  மேற்கொண்டுள்ளன. அதிகாரிகளின் ரகசிய குறிப்பு ,  திறமை , பணிமூப்பு ஆகியவை வைத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததோடு இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு மதிப்பெண் முறையில் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ….! மகள் கர்ப்பத்திற்கு என் கணவரே காரணம்…. நீதிமன்றதை நாடிய தாய்..!!!!

கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் அச்சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணம் அவரது தந்தை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் தாய் தனது மகளின் நிலைமை குறித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது. “குழந்தை உயிருடன் இருந்தால் அதைப் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளி மாணவிகளை கடத்தி இப்படியா…? அம்பலமான டெலிவரி பாய்ஸ் லீலைகள்…!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டு சிறுமிகளை மார்ச் 5ம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்கள். இது தொடர்பாக பத்தனம்திட்டா காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறுமிகள் கடைசியாக சென்று வந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் காணாமல் போன அந்த மாணவிகள் இருவரையும் காரில் ஏற்றி கடத்திச் செல்லும் நிகழ்வு பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பத்தனம்திட்டா […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம்…. அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!!!

பெண்களுக்கு மாத சம்பளமாக 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு பேசியபோது, கேரள அரசை போன்று தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

2022-23 கேரள பட்ஜெட்…. புதுசா தொழில்நுட்ப பூங்கா வரப்போகுது…. இன்னும் சில அம்சங்கள் இதோ…..!!!!!

கேரள மாநில சட்டப் பேரவையில் நேற்று 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதிமந்திரி கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களான, “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூபாய் 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  திருவனந்தபுரம் வெளிவட்ட சாலைக்கு  ரூபாய்.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் பணிக்கு ரூபாய் 127 கோடியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

நடமாடும் ரேஷன் கடைகள்…. இனி வீட்டு வாசலுக்கே பொருள் வரும்…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரள சட்டசபையில் நேற்று அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மீனவர்கள் மற்றும் பட்டியல் இன சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2,063,64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்…. குவியும் பாராட்டுக்கள்..??

கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக கோட்டயத்தை சேர்ந்த தீபா மோல்  என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் 108 என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் […]

Categories
அரசியல்

“சபாஷ்!”… தரிசு நிலத்தை தோட்டமாக மாற்றி… அசத்திய ஓய்வு பெற்ற ஆசிரியை…!!!

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தரிசு நிலத்தை தன் கடின உழைப்பின் மூலமாக நன்றாக விளையக்கூடிய பூமியாக மாற்றி அசத்தியிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த 62 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண், ஆசிரியையாக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். எனவே ஓய்வு பெற்றபின் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த வருடத்தில் ககர்சாக்ஷ்ரி விருது பெற்றவர். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. எனது […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. 8 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி…. வெளியான பகீர் பின்னணி…!!!!

கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் பிரதாபன். இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மனைவி, மூத்த மகன், மருமகள் மற்றும் 8மாத பேத்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரதாபன் வீட்டில் இன்று அதிகாலை 1.45 மணி அளவில் அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் கழிவறையில்…. இருந்த வெள்ளை காகிதம்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

  கேரள மாநிலத்தில் பிரபல ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலுக்கு தம்பதியர் ஒருவர்  உணவு  சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.  அப்போது ஜன்னல் அருகே வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

டாட்டூ குத்த வந்த பெண்களிடம்…. பிரபல டாட்டூ கலைஞர் மீது…. அடுத்தடுத்து குவியும் புகார்கள்…!!!

டாட்டூ குத்த வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக டாட்டூ  கலைஞர் மீது புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒருவர்  பிரபல டாட்டூ  கலைஞர். இவர் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பார்லரில்  நடிகைகள், மாடல் அழகிகள் வரை பலரும் குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்த வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் சேனலுக்காக…. சினை பசுவை கொன்று சமைத்த கொடூரர்கள்…. பெரும் அதிர்ச்சி…!!!!

கேரளாவில் இறைச்சிக்காக சினை மாட்டை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் ஏருர்  பகுதியின் குளத்துப்புழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது41). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தான் வளர்த்து வரும் பசுக்களை  வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில்  சினையாக இருந்த பசு  ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது […]

Categories
அரசியல்

“தமிழர்களும் மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்…!!” கேரள முதல்வர் பெருமிதம்…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டாட்சிக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது மாநிலங்களின் உரிமையை காக்க முதல் ஆளாக நிற்பவர் ஸ்டாலின். மேலும் தமிழர்களும் மலையாளிகளும் மண்ணின் குழந்தைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. கேரளாவுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கொலை வழக்கு…. கொலையாளிக்கு தூக்கு தண்டனை…. அதிரடி உத்தரவு….!!!

கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட்  உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்துகளில் இனி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. மாநில அரசு உத்தரவு…!!!!

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு  புதிய  உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில் இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவும், பாட்டு கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால்  அது குறித்து தகவல் தெரிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

புதிய அணை கட்ட கேரளா முயற்சி…. எதிர்க்கும் தமிழக அரசு…. அமைச்சர் துரைமுருகன்…..!!!!!!

கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்து இருப்பதை ஏற்க முடியாது என்றும் தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்காது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய அணை கட்டுவதற்கு முயற்சி செய்யும் கேரளாவின் திட்டத்தை எல்லா விதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும். ஆகவே கேரள […]

Categories
தேசிய செய்திகள்

கோட் சூட் போட்டு…. மாடலிங்காக மாறி…. இணையத்தை கலக்கும் 6௦ வயது கூலித் தொழிலாளி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணகாடு கொடிவள்ளி பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் வழக்கமாக இவர் சட்டையும் லுங்கியும் அணிவது வழக்கம். இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் இவரை பார்த்து உள்ளார். இவரை பார்த்தவுடன் போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் ஷரீக் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனின் காம இச்சைக்கு….!! 11 வயது மகளை அனுப்பி வைத்த கொடூர தாய்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்மிதா 33 வயதாகும் இவர் ஒரு கணவனை இழந்த பெண் ஆவார். ஸ்மிதாவுக்கு 11 வயதில் மகளும் பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஸ்மிதாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜிக்கு ஸ்மிதாவின் 11 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதனை ஸ்மிதாவிடம் கூறி மகளை தனியாக அழைத்து வருமாறு சொல்லியுள்ளார். அதன்படி ஸ்மிதா தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“கோழிக்குழம்பு தரேன் வா” சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. வெளியான அதிரடி தீர்ப்பு..!!

கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது சிறுமிக்கு நடந்த  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.  கேரள மாநிலம் இடுக்கி செருங்கோட்டை வெள்ளபாணியை சேர்ந்த வின்சென்ட் (வயது 57). இந்நிலையில்  இவரது வீட்டிற்கு கோழி குழம்பு தருவதாக கூறி  11 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுமி அழைக்கப்பட்டுள்ளார் . அதன் பின்னர் அந்த சிறுமியை வின்சென்ட்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் இதுபற்றி சிறுமி தன் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் பட்டாம்பி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! குரங்கு காய்ச்சல் பாதிப்பு… மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!!!

குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு  எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா  அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கோரவிபத்து: தாறுமாறாக ஓடிய கார்…. பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்…!!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் கால்வாயில் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து அங்கு உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையை அழைத்தனர். அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து, காரையும் அதிலிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தன்று…. இப்படியொரு சம்பவமா….? கேரளாவை வியக்க வைத்த திருநங்கைகள்…!!!!

கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கைகள் 2 பேர்  திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் சியாமா எஸ் பிரபா, மனு  கார்த்திகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதை உறவினர்கள், குடும்பத்தினருக்கு  கூறியதற்கு அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG..! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…. அதுவும் 18 வருஷம் கழிச்சி…. ஆச்சர்ய சம்பவம்…!!!!

கேரளாவில் 18 வருடங்கள் கழித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அதிரம்புழ என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் சுரேஷ் பிரசன்னா  குமாரி தம்பதியர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 18 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது பிரசன்னா குமாரி கர்ப்பமாகி உள்ளார். இந்த செய்தி  குழந்தை இல்லாத  அந்தத் தம்பதியருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களாக மலையில்… சிக்கி தவித்த பாபு பத்திரமாக மீட்பு…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவர்   தனது நண்பர்களோடு நேற்று முன்தினம் அங்குள்ள செரைடு மலைக்கு  சாகச பயணம் சென்றுள்ளார்.  இந்த மலையானது மிகவும் செங்குத்தாக இருப்பதால் அந்த மலைப்பகுதிக்கு யாரும் செல்வது கிடையாது. இந்நிலையில் பாபு தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து   மலையில் ஏறும்போது மிகவும் சிரமமாக இருந்ததால் பாதி வழியிலேயே இரண்டு நண்பர்கள் திரும்பிவிட்டனர். ஆனந்த் பாபு தொடர்ந்து ஏறியுள்ளார் சிறிது நேரத்திற்கு பிறகு அவரால் தொடர்ந்து ஏற  முடியவில்லை என்பதனால்  கீழே இறங்க தீர்மானித்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

டிவி பார்க்க வந்த சிறுமிக்கு…. பாலியல் வன்கொடுமை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரப்பை எற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவர் வீட்டிற்கு உறவுக்கார சிறுமி ஒருவர் டிவி பார்க்க வந்துள்ளார். அப்போது ஆதர்ஸ் வீட்டில் யாரும் இல்லை. அந்நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீட்டில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்ற சிறுமியை மிரட்டி உள்ளார். பின்னர் அச்சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் இப்படியா…? மருத்துவரின் கேவலமான செயல்….!!!!

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மருத்துவர்  கைது செய்யப்பட்டுள்ளார் . கேரளாவின் திருவனந்தபுரத்தில் மணக்காடு எனும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான  கிரீஷ் (58) இவர் மனநலம்  குறித்த டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2017 ம்ஆண்டு   திருவனந்தபுரத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சரிவர படிக்காமல் இருந்த காரணத்தால் அவர்களது பெற்றோர்கள் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு மன நல மருத்துவர் கிரீஷ்ஷிடம்  […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு….!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் பரிசோதனை செய்யும் இருவரில் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது என்ற பகீர் தகவலை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரளாவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 12-ஆம் தேதியன்று…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு  பற்றிய தகவல்கள்  வெளியாகியுள்ளது. நாடு  முழுவதும்  கொரோனா  தொற்று  காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள்  அறிவித்து வருகிறது. அந்த வகையில்   கேரள  மாநிலத்திலும்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள  நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு 12ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடை  திறப்பானது  […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. கேரளா அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!

கேரள அரசு, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 38,684 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரள அரசு, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கேரளாவிற்கு வந்ததிலிருந்து ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று தங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ( பிப்.6 ) முழு ஊரடங்கு அமல்…. முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா அதி வேகமாக பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்களில் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டு வந்தார் வாவா சுரேஷ்….!! பாம்பு பிடிப்பதில் வல்லவர்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள குறிச்சி பகுதியில் பாம்பினை பிடித்து சாக்கு பையில் போடும்போது அந்த பாம்பின் கடிக்கு ஆளானார். இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட வாவா சுரேஷ் தற்போது தொடர் சிகிச்சைக்கு பின்னர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார். பாம்பு கடிப்பது சுரேஷுக்கு முதல் தடவை அல்ல ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான நைட் ஓட்டம் பிடித்த மாப்பிளை…. வெளியான திடுக்கிடும் தகவல்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30), அடூர் அருகேயுள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியதாகவும், அவருக்கு ரத்தம் கொடுப்பதற்காக தான் செல்ல வேண்டும் என்றும் பெண்ணிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் காண்பித்து…. சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….!!!!

பிரேம்குமார் (59) என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரேம்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு தனது போனில் உள்ள ஆபாச வீடியோக்களை காண்பித்து சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனைப் போலவே சிறுவர்களையும் அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மீனவர்களை… சுட்டுக்கொன்ற கடற்படையினர்… “வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்”… நடந்தது என்ன?

இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா  லாக்ஸி  என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல இதுவரை 300 விஷ பாம்புகள்…. வாவா சுரேஷ் கவலைக்கிடம்….!!!

கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். கேரளா கோட்டயம் அருகே குறிச்சி கிராமத்தில் பிடித்த நாகப்பாம்பை வாவா சுரேஷ் பையில் போடும்போது அவரின் தொடையில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் கோட்டயம்  மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு வேலை வேண்டாம் என கூறி மக்களுக்காக சேவை செய்து வரும் சுரேஷை இதுவரை 300 விஷப் பாம்புகள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |